குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணி ! பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது

Priyankagandhi and other Congress leaders taken in to custody as Delhi Police stops Congress march in support of protesting

டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அண்மையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியானா, குஜராத், பஞ்சாப், உத்தரப்பிரதேம் உள்ளிட்ட பல மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், டெல்லி எல்லையில் போராட்டம் நடத்திக்கொண்டு வருகின்றனர். இவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக 2 கோடி பேரிடம் இருந்து பெறப்பட்ட கையெழுத்துகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் ராகுல் காந்தி சமர்பிக்கவுள்ளார்.இதனிடையே  டெல்லியில் குடியரசு தலைவர் மாளிகை நோக்கி பேரணியாக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி மற்றும்  கட்சியினர் பேரணியாக சென்றனர்.ஆனால் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள்.போலீஸ் தடையை மீறி  குடியரசு தலைவர் மாளிகையை நோக்கி சென்ற பிரியங்கா காந்தி உள்ளிட்டோர்  கைது செய்யப்பட்டனர்.