அசாம் மாநில முன்னாள் முதலமைச்சர் தருண் கோகாய் காலமானார். அவருக்கு வயது 86. ஆகஸ்ட் 25 அன்று கொரோனா வைரசால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சில நாட்களுக்குப் பிறகு, அவர் நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் பல உறுப்பு செயலிழப்பால் கவுகாத்தியில் உள்ள மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிசைப் பெற்று வந்த நிலையில், தருண் கோகாய் உயிரிழந்தார். அசாமில் இருந்து ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினரும், இரண்டு முறை மத்திய அமைச்சருமான கோகாய் […]
பெங்களூரு மற்றும் சென்னையில் சியோமி நிறுவனத்தின் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி மொபைல், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க் , சார்ஜர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பொருள்களை சில சப்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் புகாரின் பேரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காவல்துறையினர் சோதனையிட்டனர். சோதனையில் போலி பொருட்கள் விற்பனை செய்ததாக இரு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இரு நகரங்களிலிருந்து கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.9 லட்சம் மற்றும் ரூ.8.4 […]
ஐ.ஆர்.சி.டி.சி தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகளை இன்று முதல் ரத்து செய்துள்ளது. பயணிகளின் பற்றாக்குறையால் லக்னோ-டெல்லி மற்றும் மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் இயங்கும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவையை நிறுத்த ஐ.ஆர்.சி.டி.சி முடிவு செய்துள்ளது. தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கொரோனா வைரஸ் காரணமாக அதன் செயல்பாடு நிறுத்தப்பட்ட பின்னர் அக்டோபரில் மீண்டும் இயங்கத் தொடங்கியது. ஐ.ஆர்.சி.டி.சி ஒரு அறிக்கையில், கொரோனா ஊரடங்கு தளர்வு பின்னர் பயணிகளின் பற்றாக்குறை காரணமாக அனைத்து தேஜாஸ் ரயில்களின் செயல்பாட்டை ரத்து செய்ய நிர்வாகம் முடிவு செய்தது. […]
மத்திய கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா தமிழ்நாடு, பாண்டிச்சேரி மற்றும் ஆந்திரப்பிரதேச அரசு தலைமைச் செயலாளர்களிடம் புயல் குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நிவர் ஒரு சூறாவளி புயலாக தீவிரமடைய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் உருவாகி இருக்கும் நிவர் தீவிர புயலாக நாளை மறுநாள் கரையை கடக்கும்போது மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.காற்றழுத்த தாழ்வு மையம் மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் […]
கொரோனா வைரஸ் பாதிப்பு மற்றும் மாநிலங்களில் தடுப்புமருந்து வழங்குவது குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார். இந்தியாவில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், முதலில் நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன்பின் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்ட மத்திய அரசு சில தளர்வுகளை அறிவித்தது.தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 30ஆம் தேதி வரை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டது.இதனிடையே பிரதமர் மோடி […]
டெல்லியில் டாக்டர் பி டி மார்க்கில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்துள்ளார். இந்த குடியிருப்புகள் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க்கில் அமைந்துள்ளது. 80 வருடங்கள் பழமையான 8 பங்களாக்கள் 76 குடியிருப்புகளாக புதிதாக கட்டப்பட்டுள்ளது.இந்த பிளாட்களின் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியயைவிட சுமார் 14 % குறைவாக செலவு செய்து கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் இருந்தபோதிலும் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் பசுமைக் […]
ஒடிசா ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுஷிலா தேவி இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து ஒடிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “ஆழ்ந்த வருத்தத்துடனும், கனமான இதயத்துடனும், திருமதி சுஷிலா தேவி நேற்று இரவு காலமானார் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், ஓம் சாந்தி என்று பதிவிடப்பட்டுள்ளது. மறைந்த சுஷிலா தேவி கணவர், நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்களுடன் […]
காஷ்மீரில் கடந்த வெள்ளிக்கிழமை 4 பயங்கரவாதிகள் பேருந்து மூலம் ஜம்முவிற்கு வருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, நஹ்ரோடா மாவட்ட தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வாகன சோதனைச்சாவடியில் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பரிசோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்தில் இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை பார்த்ததும் தப்பித்து அருகில் இருந்த காட்டுப்பகுதியில் தப்பி சென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். அப்போது, பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிரிழந்த 4 பேரும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் […]
டெல்லியில் டாக்டர் பி டி மார்க்கில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்புகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவும் கலந்து கொள்கிறார். இந்த குடியிருப்புகள் டெல்லியில் உள்ள டாக்டர் பி.டி.மார்க்கில் அமைந்துள்ளது. 80 வருடங்கள் எட்டு பழைய பங்களாக்கள் 76 குடியிருப்புகளாக மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.இந்த பிளாட்களின் கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியயைவிட சுமார் 14 % குறைவாக […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 44 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து கொண்டே சென்றாலும் புதிதாக தொற்றுகள் ஏற்பட்டு கொண்டேதான் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் மொத்தமாக கொரோனா தொற்றால் 9,140,312 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 133,773 பேர் உயிரிழந்துள்ளனர், 8,561,444 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக இந்தியாவில் கொரோனா தொற்றால் 44,404 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 510 பேர் […]
கர்நாடகாவில் அதிகரித்து வரும் கொரோனா காரணமாக நவம்பர் 17 முதல் திறக்கப்பட்ட கல்லூரிகள் மீண்டும் மூடப்படலாம் என்று சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது .அந்த வகையில் சமீபத்தில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பட்டப்படிப்பு, பொறியியல்,டிப்ளமோ கல்லூரிகள் நவம்பர் 17-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது . கல்லூரிகள் திறந்த 6 நாட்களில் குறைந்தது 130 மாணவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கொரோனா பாதிப்பு […]
நேற்று ஊட்டச்சத்து குறைபாடு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பிரதேச முதல்வர் சவுகான், மத்திய பிரதேச மாநிலத்தில் சாலைகளில் கால்நடைகள் ஆதரவற்று சுற்றி திரிகின்றன. மாடுகளுக்கு பிரத்தியேகமாக தங்குமிடம் அமைக்கப்படும். 7 லட்சம் முதல் 8 லட்சம் வரையிலான ஆதரவற்ற கால்நடைகள் சுற்றி திரிகின்றன. இதனால், மத்திய பிரதேச அரசு சுமார் 2,000 புதிய மாட்டு முகாம்களை கட்ட உள்ளது. “அனைத்து மாட்டு முகாம்களும் அரசாங்கத்தால் நடத்தப்படாது, ஆனால், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் அவற்றை இயக்கும். மாநிலத்தில் உள்ள […]
“நிவார்” புயலுக்கு முன்னர் அரபிக்கடலில் உருவாகியுள்ள “கடி” புயல், இன்று சோமாலியாவில் கரையை கடக்கவுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தின் முதல் புயல், வரும் 25 ஆம் தேதி கரையை கடக்கும் எனவும், இந்த புதிய புயலுக்கு “நிவார்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தற்பொழுது கரையை நோக்கி நகரத் தொடங்கியது. இந்த நிவார் புயல் காரணமாக தமிழகத்தில் 10 மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 10 மாவட்டங்களிலும் தேசிய மீட்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். […]
சமூகவலைத்தளங்களில் அச்சுறுத்தும் வகையிலான பதிவுகள் பதிவிட்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. மார்க்சிஸ்ட் அரசின் ஒரு கடுமையான சட்டத்திற்கு கேரளா ஆளுநரான ஆரிஃப் முகமது கான் ஒப்புதல் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள ஒப்புதலின்படி எந்த ஒரு சமூக ஊடகங்கள் அல்லது இணையதளம் மூலமாக பதிவிடப்படும் அச்சுறுத்தலான பதிவுகளுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில், கேரள போலீஸ் சட்டத்தில் 118 (ஏ) என்ற புதிய […]
33 வயதான நோயாளி தனது அறுவை சிகிச்சையின் போது கண் விழித்திருக்க வேண்டும் என்பதால் அவர் பிக்பாஸ் ஷோவையும், அவதார் படத்தையும் கண்டு ரசித்தார் . அறுவை சிகிச்சையின் போது பிக்பாஸ் ஷோவையும் ,அவதார் படத்தையும் பார்த்து ரசித்த நோயாளி . இந்த சம்பவம் ஆந்திராவின் குண்டூரில் நிகழ்ந்துள்ளது.33 வயதான வர பிரசாத் என்பவருக்கு மூளை அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தது. அதனை குண்டூரின் பிருந்தா நியூரோ மையத்தில் வைத்து வர பிரசாத் செய்துள்ளார் . இந்த […]
ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி சோதனைகள் அடுத்த வாரம் இந்தியாவில் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக ரஷ்யான தடுப்பூசியான ஸ்பூட்னிக்-வி-யின் தன்னாவலர்கள் சோதனைகள் அடுத்த வாரத்தில் இந்தியாவில் தொடங்கப்படும் என்று அரசு அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர். “தன்னாவலர் சோதனைகள் தொடங்குவதற்கு தேவையான அனைத்து தேவைகளும், குறிப்பாக கட்டாய ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்பட்டுள்ளது. இது அடுத்த வாரம் தொடங்க வாய்ப்புள்ளது, ”என்று ஒரு அதிகாரி கூறினார். ஸ்பூட்னிக்-வி: மாஸ்கோவை தளமாகக் கொண்ட கமலேயா நிறுவனம் ஸ்பூட்னிக்-வி கொரோனா உருவாக்கியுள்ளது. இதனை, […]
8 நாட்களில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ பயணம் செய்து 17 வயது சிறுவன் உலக சாதனை படைத்துள்ளார். மகாராஷ்டிராவின் நாசிக் நகரை சேர்ந்தவர் 17 வயது சிறுவனான ஓம் மகாஜன் .அவருக்கு சைக்கிள் ஓட்டுவது மிகவும் பிடிக்குமாம் .தற்போது அதன் மூலம் உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது ஓம் மகாஜன் காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை சுமார் 3,600 கி.மீ சைக்கிளில் பயணம் செய்து உலக சாதனை படைத்துள்ளார்.அதாவது 8 நாட்கள் ,ஏழு […]
இந்தியாவில் இதுவரை மொத்தமாக 9.09 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் இந்தியாவில் கொரோனாவின் தீவிரம் குறைந்து கொண்டு செல்கின்றது என்று கூறினாலும், இதுவரை கொரோனா வைரஸால் இந்தியாவில் மொத்தமாக 9,095,806 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 13,32,27 பேர் உயிரிழந்துள்ளனர், 85,216,17 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களை விட குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகம். பாதிக்கப்பட்டவர்களில் 93.68 சதவீத பேர் குணமடைந்துள்ளனர் . கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் புதிதாக கொரோனா […]
உ.பி-யில் கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று 11.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார் . உத்திரப்பிரதேசத்தின் விந்தியா பிராந்தியத்தின் மிர்சாபூர் மற்றும் சோன்பத்ரா மாவட்டங்களில் ‘ஜல் ஜீவன்’ மிஷனின் கீழ் 23 கிராமப்புற குழாய் குடிநீர் திட்டங்களுக்கு இன்று காலை 11.30 மணிக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் அடிக்கல் நாட்டுகிறார் . ரூ.5,555.38 கோடி மதிப்பிலான இந்த திட்டங்கள் மூலம் 2,995 கிராமங்களை சேர்ந்த அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் […]
உத்தரகாண்டில், சாதிமறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.50,000 வழங்கப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் சாதிமறுப்புத் திருமணம் செய்வதால், பலர் பயங்கரமான முறையில் கொலை செய்யப்படுகின்றனர். இந்நிலையில் உத்தரகாண்ட் அரசு சாதி மறுப்பு திருமணம் செய்பவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகையாக வழங்குவதாக அறிவித்துள்ளது. ஆளும் பாஜக அரசு திருமணத்தின் பெயரில் பெண்கள் மதமாற்றம் செய்யப்படுவதை தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற திட்டமிட்டு வருகிற நிலையில், உத்தரகாண்ட் அரசு இப்படி ஒரு அறிவிப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து […]