பெங்களூரு, சென்னையில் கைப்பற்றப்பட்ட போலி சியோமி பொருள்கள் ..!

In Bangalore and Chennai, more than 3,000 items worth Rs 33.3 lakh worth of counterfeit mobiles, headphones were seized from some suppliers.

பெங்களூரு மற்றும் சென்னையில் சியோமி நிறுவனத்தின் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள போலி மொபைல், ஹெட்ஃபோன்கள், பவர் பேங்க் , சார்ஜர்கள் உட்பட 3,000 க்கும் மேற்பட்ட பொருள்களை சில சப்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டன. நிறுவனத்தின் புகாரின் பேரில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் காவல்துறையினர் சோதனையிட்டனர்.

சோதனையில் போலி பொருட்கள் விற்பனை செய்ததாக இரு நகரங்களிலிருந்தும் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டனர். இரு நகரங்களிலிருந்து கைது செய்யப்பட்ட கடை உரிமையாளர்களிடம் இருந்து ரூ.4.9 லட்சம் மற்றும் ரூ.8.4 லட்சம் மதிப்புள்ள போலி மி இந்தியா தயாரிப்புகளை விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில், இந்த சப்ளையர்கள் நீண்ட காலமாக சந்தையில் பல அங்கீகரிக்கப்படாத பொருள்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.