ஒடிசா ஆளுநரின் மனைவி சுஷிலா தேவி காலமானார்..!

Sushila Devi, wife of Odisha Governor Ganesh Lal, succumbed to her injuries at a private hospital here last night.

ஒடிசா ஆளுநர் கணேஷி லாலின் மனைவி சுஷிலா தேவி இங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் உடல்நிலை குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து ஒடிசா ஆளுநரின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் “ஆழ்ந்த வருத்தத்துடனும், கனமான இதயத்துடனும், திருமதி சுஷிலா தேவி நேற்று இரவு காலமானார் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், ஓம் சாந்தி என்று பதிவிடப்பட்டுள்ளது. மறைந்த சுஷிலா தேவி கணவர், நான்கு மகள்கள் மற்றும் மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.