அரசியல்

வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் -வைகோ

வெற்றிடத்தை நிரப்பிவிட்டார் ஸ்டாலின் என்று  வைகோ தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அளித்த பேட்டி ஒன்றில் தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கு அரசியல் கட்சியினர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில்,  வெற்றிடம் என்பது அறிவியல் பூர்வமாக இல்லை.வெற்றிடத்தை காற்று நிரப்பி கொண்டே இருக்கும். கருணாநிதி மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்தை […]

#DMK 2 Min Read
Default Image

இலங்கை அதிபர் தேர்தல் ! பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியது

இலங்கையில் நடைபெறும் அதிபர் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கியது . இலங்கையில் 8-வது அதிபரை தேர்வு செய்வதற்கான அதிபர் தேர்தல் இன்று நடைபெறுகிறது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்கு பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.மொத்தமாக 12,845 வாக்குச்சாவடி மையங்களில் வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது.இந்த தேர்தலில் 1 கோடியே 59 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்ச, சஜித் பிரேமதாச உட்பட 35 வேட்பாளர்கள் […]

#Politics 2 Min Read
Default Image

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ! குழுவை அமைத்தது தேமுதிக

தேமுதிகவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு  5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.இந்தநிலையில் தமிழகத்தில் நீண்ட நாட்களாக நடைபெறாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தல் வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி என்று தேமுதிக தெரிவித்துள்ளது.இதனால்  தேமுதிக சார்பில் உள்ளாட்சி அமைப்பு தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைக்கு துணை செயலாளர் சுதீஷ் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

மேயர் தேர்தலுக்கு அதிமுக அமைச்சர் மகன் விருப்பமனு தாக்கல்

மேயர் பதவிக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிட விருப்பமனு தாக்கல்  செய்துள்ளார். நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர்அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன். இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது என்று தகவல் வெளியாகி வருகிறது.இதனையொட்டி அதிமுக சார்பில் விருப்பமனு விநியோகம் நடைபெற்று வருகிறது.இதில் சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்தன் […]

#ADMK 2 Min Read
Default Image

உள்ளாட்சி தேர்தல் தள்ளிப்போக திமுக தான் காரணம் – அமைச்சர் காமராஜ்

திருவாரூரில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. கடந்த காலங்களில் தேர்தல் தள்ளிப்போக காரணமாக இருந்தது திமுக தான். ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சித் தலைவராக ஸ்டாலின் செயல்படவில்லை. தமிழகத்தில் அதிமுக இருக்கக்கூடாது என்றுதான் செயல்படுகிறார்.  முதலமைச்சர் குறித்து விமர்சித்து பேச கமல்ஹாசனுக்கு எந்தவித அடிப்படை தகுதியும் கிடையாது. அவர் அதை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று  அமைச்சர் காமராஜ்  தெரிவித்துள்ளார். 

#ADMK 2 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும்  – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும்  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் வெற்றிடம் என்று  அரசியலில் இல்லாதவர்கள் எல்லாம் கூறிக் கொண்டிருப்பதற்கு பதில் சொல்ல முடியாது. உள்ளாட்சித் தேர்தலில்  அதிமுக அமோக வெற்றி பெறும். உள்ளாட்சித் தேர்தலில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். தேர்தலுக்கு முன்பு அரசு அதிகாரிகளை மாற்றுவது ஒன்றும் தவறு கிடையாது  என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

திமுக கோடீஸ்வர கட்சி,அதிமுக ஏழைகளின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  திமுக பணக்கார கட்சி, ஏழைகளின் கட்சி அல்ல. அதனால் தான் மேயர் பதவிக்கு 50 ஆயிரம் கட்டணம் நிர்ணயித்து உள்ளனர். ஆனால் அதிமுக ஏழைகளின் கட்சி. உதயநிதி கடந்த ஆண்டு சாதனைகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்பேன் என்று சொல்லியுள்ளார். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக தான் ஆட்சியில் இருந்து வந்துள்ளது. எனவே எங்களின் சேவையை, மக்கள் உணர்ந்து அதிமுகவிற்கு வாக்குகளை அளிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

ரபேல் விவகாரம் ! காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் -முரளிதரராவ்

ரபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முரளிதரராவ் தெரிவித்துள்ளார். ரபேல் விமானங்களை வாங்கியதில் முறைகேடு இல்லை என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை சீராய்வு செய்ய கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இது குறித்து பாஜக மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் கூறுகையில், ரபேல் குறித்து தவறான பிரசாரம் செய்த காங்கிரஸ் கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும் பாஜகவின் உட்கட்சி தேர்தல்கள் […]

#BJP 2 Min Read
Default Image

5 புதிய மாவட்டங்களுக்கு ஆட்சியர்கள் நியமனம்-தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் புதிதாக கள்ளக்குறிச்சி,தென்காசி,ராணிப்பேட்,திருப்பத்தூர்,செங்கல்பட்டு ஆகிய 5 மாவட்டங்கள் புதிதாக பிரிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 5 மாவட்டங்களுக்கு ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி ஆட்சியராக கிரண் குராலா நியமனம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு ஆட்சியராக ஜான் லூயிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி ஆட்சியராக அருண் சுந்தர் தயாளன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  திருப்பத்தூர் ஆட்சியராக […]

#Chennai 2 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தல் : தேமுதிக விருப்பமனு விநியோகம் தொடக்கம்

தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு வழங்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது. இந்தநிலையில் உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் மாதம் நடைபெறும் என்று தகவல் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோர் விருப்பமனு பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.இதனையொட்டி இன்று கோயம்பேட்டில் உள்ள தேமுதிக  தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் விருப்பமனுவை விநியோகத்தை தொடங்கிவைத்தார்.   

#DMDK 2 Min Read
Default Image

அதிமுக அமைச்சர் – திமுக எம்எல்ஏ இடையே வாக்குவாதம்

வேலூரில் அமைச்சர் கே.சி.வீரமணி திமுக எம்எல்ஏ நந்தகுமார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டில் ,முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.சி.வீரமணி , திமுக எம்எல்ஏ நந்தகுமார்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் பேசுகையில் ,திடீரென்று அமைச்சர் கே.சி.வீரமணிக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.  

#ADMK 2 Min Read
Default Image

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : சிதம்பரத்திற்கு ஜாமீன் மறுப்பு

சிதம்பரம் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி  சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது.பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.பின்னர் ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை சிதம்பரத்தை கைது செய்தது. இதனை தொடர்ந்து சிபிஐ வழக்கில் சிதம்பரம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. தற்போது ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில்  அமலாக்கத்துறை வழக்கில் சிதம்பம் திகார் சிறையில் உள்ளார்.எனவே […]

delhi high court 3 Min Read
Default Image

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டம் – மு.க.ஸ்டாலின் பேட்டி

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அதிமுக திட்டமிட்டு வருவதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் கடந்த 3 வருடத்திற்கு மேலாக நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது இந்த ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சித்  தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இந்த நிலையில் இன்று சென்னை குளத்தூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் […]

#Chennai 3 Min Read
Default Image

சபரிமலை செல்லும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாது! கேரள சட்டத்துறை அமைச்சர் அதிரடி!

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில்  தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த உச்சநீதிமன்றம் சென்றாண்டு வழங்கியிருந்த அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்கலாம் என்ற தீர்ப்புதான் தற்போது அமலில் இருக்கும் என கூறப்படுகிறது. இதனால்  இந்தாண்டும் சபரிமலை ஐயப்பனை தரிசிக்க பெண் பக்தர்கள் வருகை இருக்கும். இதுகுறித்து கேரள சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன் கூறுகையில், சென்றாண்டே தீர்ப்பை அமல்படுத்த சில […]

#Sabarimala 3 Min Read
Default Image

மஹாராஷ்டிராவில் நாளை மூன்று கட்சியினர் ஆளுநருடன் சந்திப்பு..!

மஹாராஷ்டிராவில் கடந்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகி மூன்று வாரத்திற்கு மேல் ஆகியும் ஆட்சியமைக்க எந்த கட்சிக்கும் பெருபான்மையும் இல்லாததால் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு  பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து தற்போது மஹாராஷ்டிராவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ள நிலையில் சிவசேனா ,காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சியினரும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் நாளை சிவசேனா ,காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சியினரும் […]

#Congress 3 Min Read
Default Image

நவம்பர் 17-ஆம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம் -சபாநாயகர் அழைப்பு

வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா. நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில்,வருகின்ற நவம்பர் 18-ஆம் தேதி முதல் டிசம்பர் 13-ஆம் தேதி வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவித்தது. இந்த நிலையில் இதனையொட்டி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.அதாவது குளிர்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து  ஆலோசனை மேற்கொள்ள வருகின்ற 17 -ஆம் தேதி அனைத்து கட்சி […]

#Parliament 2 Min Read
Default Image

ரஜினி குறித்து கூறிய அழகிரி ,பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ரஜினி குறித்து அழகிரி கூறியதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,மு.க.அழகிரி ரஜினியின் கருத்து குறித்து  கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை  ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,அழகிரி, ரஜினி கருத்துகளை பொருட்படுத்த […]

#ADMK 2 Min Read
Default Image

மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம்- அமைச்சர் தங்கமணி

மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள் என்று என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.  அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், விவசாய நிலத்தை அழித்து மின்கோபுரம் அமைப்பதாக தவறான பிரசாரம் செய்து வருகிறார்கள். மின்கோபுரம் அமைப்பதற்கு மாற்றாக புதைவடம் அமைக்கும் தொழில்நுட்பம் அமெரிக்காவில் கூட இல்லை.அரசு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டுமென்றால் மின் கோபுரங்கள் அமைத்துதான் ஆக வேண்டும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். 

#ADMK 2 Min Read
Default Image

ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை- அமைச்சர் பாஸ்கரன்

ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார். அமைச்சர் பாஸ்கரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது கூறுகையில், வசதியான வீட்டு பிள்ளைகள் படித்து பெரியவர் ஆனதும் குடிகாரர்களாக மாறிவிடுகின்றனர். வெளியூருக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் கடனாளியாகின்றனர். ஆண் பிள்ளைகள் படிப்பில் கவனம் செலுத்துவதில்லை. பெண் பிள்ளைகள் மட்டுமே படிப்பில் கவனம் செலுத்துகின்றனர் என்று அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

#ADMK 2 Min Read
Default Image

ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்- ரவிசங்கர் பிரசாத்

ரபேல் விவகாரத்தில் ராகுல் காந்தி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்  தெரிவித்துள்ளார்.  ரபேல் விவகாரத்தில் நீதிமன்றமே காவலாளியே திருடன் என்று கூறியதாக கூறி பிரதமர் மோடியை  விமர்சித்தார் ராகுல் காந்தி.இதனால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கில் இருந்து அவரை விடுவித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில்,  ரபேல் தீர்ப்பு உண்மைக்கும், நேர்மையாக […]

#BJP 2 Min Read
Default Image