விளையாட்டு

யார் பெஸ்ட்..? ஆஸ்திரேலிய வீரர்களின் மனநிலை குறித்து தெ.ஆ முன்னாள் ஜாம்பவான் பரபரப்பு தகவல்..!

கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் தனது 16 வயதில்  1989 இல் கிரிக்கெட்டில் அறிமுகமாகி 2013 இல் ஓய்வு பெற்றார். சச்சின் டெண்டுல்கர் தனது 24 ஆண்டுகால சர்வதேச வாழ்க்கையில் பல சாதனைகளை தனது பெயரில் வைத்திருந்தார். அதேபோல மேற்கிந்திய தீவுகளின் சிறந்த பேட்ஸ்மேன் பிரையன் லாராவும் சச்சினை போல பல சாதனைகளை செய்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு வருடம் கழித்து கிரிக்கெட்டில் பிரையன் லாரா அறிமுகமானார்.  ஆனால் அவர் 2007 […]

Brian Lara 5 Min Read

ஆக்ரோஷமா விளையாடாதீங்க! சுப்மன் கில்லுக்கு அட்வைஸ் செய்த சுனில் கவாஸ்கர்!

இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லின் டெஸ்ட் போட்டியின் பார்ம் சற்று குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால், கடைசியாக கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் முதல் இன்னிங்ஸில் 2 ரன், அடுத்த இன்னிங்ஸில் 26 ரன்கள் என குறைவான ரன்களை எடுத்தார். ஆனால், இந்த டெஸ்ட் தொடருக்கு முன்பு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற  4-வது டெஸ்ட் போட்டியில் 128 ரன்கள் எடுத்தார். […]

#Shubman Gill 6 Min Read
Sunil Gavaskar About shubman gill

ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த டேவிட் வார்னர்..!

நாளை மறுநாள் தொடங்கும் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இன்று  செய்தியாளர்களிடம் வார்னர் கூறுகையில், ” 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பையின் போது ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவது பற்றி யோசித்தேன். இதனால் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள வேறு சில லீக்குகளில் விளையாட முடியும். மேலும் வார்னர் தனது மனைவி கேண்டிஸ் மற்றும் மூன்று மகள்கள் ஐவி, இஸ்லா மற்றும் […]

#David Warner 7 Min Read

பயிற்சியின் போது ஷர்துல் தாக்கூருக்கு ஏற்பட்ட காயம்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, பயிற்சியின் போது ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இந்த காயத்தின் தீவிரம் இன்னும் தெரியவில்லை, மேலும் அவருக்கு ஸ்கேன் பரிசோதனையும் செய்யப்படலாம். தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷர்துல் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேறலாம் என்று கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3ஆம் தேதி தொடங்குகிறது. தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டி, […]

SAvIND 3 Min Read

இந்தியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய ஆஸ்திரேலியா..!

நேற்று ஆஸ்திரேலியா, இந்திய பெண்கள் அணிகளுக்கு இடையே இரண்டாவது ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய ஆஸ்திரேலியா பெண்கள் அணி 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டைகளை இழந்து 258 ரன்கள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து, 259 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர் எட்டு விக்கெட் இழந்து 255 ரன்கள் மட்டுமே எடுத்தனர். […]

INDvAUS 4 Min Read

வருங்காலத்தில் ஜாம்பவான்களாக மாறக்கூடியவர்கள் இவர்கள் தான்… நாசர் உசேன்.!

உலக கிரிக்கெட்டின் எதிர்கால ஜாம்பவான்கள்: இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் உலக கிரிக்கெட்டில் வருங்கால ஜாம்பவான்களாக மாறக்கூடிய இரண்டு இளம் வீரர்களை தேர்வு செய்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அதாவது ஐசிசி வெளியிட்டுள்ள வீடியோவில், உசேன் தான் தேர்ந்தெடுத்த இளம் கிரிக்கெட் வீரரின் பெயரை குறிப்பிட்டுள்ளார். அதில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் மற்றும் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் எதிர்கால நட்சத்திரங்களாக மாறுவதற்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளனர் என்று நாசர் […]

#Rachin Ravindra 8 Min Read

146 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய வீரர் விராட் கோலி சாதனை..!

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரக விளங்கும் விராட் கோலி இந்த காலண்டர் ஆண்டில் விளையாடிய போட்டிகளின் மூலம் இவ்வாண்டில் 2000 ரன்களை கடந்தார். ஒரு வீரர் தனது காலண்டர் ஆண்டில் அதிகபட்சமாக 2000 ரன்களை கடப்பது என்பது எளிதானது அல்ல. இந்திய வீரர் விராட் கோலி இதனை ஏழாவது முறையாக நிகழ்த்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பு 2012 (2186 ரன்கள்), 2014 (2286 ரன்கள்), 2016 (2595 ரன்கள்), 2017 (2818 ரன்கள்), 2018 […]

Virat Kohli 3 Min Read

புஜாராவை விட சிறந்த வீரர் இருக்காங்களா? கொந்தளித்த ஹர்பஜன் சிங்!

செஞ்சூரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்தது. இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்திய அணியின் தோல்வி பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் விமர்சித்து பேசி வருகிறார்கள். குறிப்பாக நேற்று சுனில் கவாஸ்கர் விமர்சித்து பேசி இருந்தார். அவரை தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். இது […]

cheteshwar pujara 5 Min Read
harbhajan singh about pujara

இதே நாளில் எந்த முன்னறிவிப்பும் இன்றி ஓய்வை அறிவித்த தோனி ..!

கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி அன்று(அதாவது இதே நாளில்)  எம்.எஸ். தோனி தனது டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற்றார். 2014-15 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் தொடரின் போது இந்த முடிவை அறிவித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3-வது போட்டி முடிந்ததும், தோனி எந்த முன்னறிவிப்பும் இன்றி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு […]

Dhoni 7 Min Read

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து கோட்ஸி விலகல்..!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது . இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையே ஜனவரி 3 முதல் கேப்டவுனில் நடைபெறவுள்ள இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டிக்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு மற்றொரு அடி ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் […]

Gerald Coetzee 4 Min Read

தவறு நடந்ததில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்! ரோஹித் ஷர்மா பேச்சு!

செஞ்சூரியன் நடந்த தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் இந்தியா தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கேப்டன் ரோஹித் ஷர்மா முதல் இன்னிங்ஸில் கே.எல்.ராகுலின் அபார சதத்தை பாராட்டியும் தோல்வி பற்றியும் பேசி உள்ளார். இது குறித்து பேசிய அவர் ” கே.எல்.ராகுல் அடித்த சதம் மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்திய அணியில் தொடர்ச்சியாக விக்கெட்கள் விழுந்த சமயத்தில் அவர் மட்டும் நிதானமாக விளையாடினார். அவரிடம் இருந்து நாம் இதனை தான் கற்றுக்கொள்ளவேண்டும். அந்த அளவிற்கு அவர் நிதானமாக விளையாடினார். ஒவ்வொரு தனி […]

Boxing Day Test 4 Min Read
rohit sharma speech

ஆப்கானிஸ்தானுக்கு புதிய கேப்டனை நியமித்த கிரிக்கெட் வாரியம்..!

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. முதல் போட்டி இன்று நடைபெறுகிறது. 2-வது போட்டி 31 தேதியும், கடைசி போட்டி ஜனவரி 2ம் தேதியும் நடைபெறுகிறது. இதற்காக 18 பேர் கொண்ட அணியை ஆப்கானிஸ்தான் அறிவித்துள்ளது. அதில் மூத்த பந்துவீச்சாளர் ரஷித் கான் காயத்தில் இருந்து மீண்டு வருவதால், அவர் அணியில் சேர்க்கப்படவில்லை.  அவர் இல்லாத நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக தொடக்க ஆட்டக்காரர் […]

Rashid Khan 3 Min Read

முகமது ஷமிக்குப் பதிலாக முக்கிய பந்துவீச்சாளரை அணியில் இணைத்த பிசிசிஐ..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் காயமடைந்த முகமது ஷமிக்கு பதிலாக அவேஷ் கானை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சேர்த்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டி 3 ஜனவரி 2024 முதல் தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நியூலேண்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நவம்பர் 30 அன்று அறிவிக்கப்பட்ட டெஸ்ட் அணியில் முகமது ஷமி சேர்க்கப்பட்டார். ஆனால், வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கணுக்கால் காயத்தில் இருந்து இன்னும் குணமடையாததால் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இருந்து […]

Avesh Khan 5 Min Read

பயிற்சி முக்கியம்! இந்தியா தோல்வி குறித்து விமர்சித்து பேசிய சுனில் கவாஸ்கர்!

இந்தியா – தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் இந்தியா அணி  245 மற்றும் 131 ரன்களை எடுத்தது, அதே நேரத்தில் தென்னாப்பிரிக்கா தனது ஒரே இன்னிங்ஸில் 408 ரன்களை குவித்தது.இதன் மூலம் தென்னாபிரிக்கா அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துள்ள நிலையில் தோல்வியை பற்றி […]

Boxing Day Test 5 Min Read
sunil gavaskar

தென்னாபிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..!

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச தேர்வு செய்தது. முதலில் இறங்கிய இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியில் அதிகபட்சமாக ககிசோ ரபாடா 5 விக்கெட்டையும், நந்த்ரே பெர்கர் 3  […]

Boxing Day Test 6 Min Read

SAvIND:முதல் இன்னிங்ஸில் 163 ரன்கள் முன்னிலையில் தென்னாபிரிக்கா ..!

தென்னாப்பிரிக்கா- இந்தியா இடையே முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் இறங்கிய  இந்தியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 67.4 ஓவருக்கு 245 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 101, விராட் கோலி 38, ஷ்ரேயாஸ் ஐயர் 31, ஷர்துல் தாக்கூர் 24 ரன்கள் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணியில் ககிசோ ரபாடா 5 […]

Boxing Day Test 6 Min Read

அன்று 199, இன்று 185.. டீன் எல்கர் கனவை கலைத்த ஷர்துல் தாக்கூர்

டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் இரண்டு நாட்கள் பேட்டிங் செய்தும் இரட்டை சதத்தை நெருங்கி வந்து அதை அடிக்காமல் வெளியேறினால் அவர்களின் மனநிலை எப்படி இருக்கும் இன்று நாம் சொல்ல தேவையில்லை, ஒரு கிரிக்கெட் வீரருக்கு டெஸ்ட் போட்டியில் ஒரு முறை இது போன்ற ஏதாவது நடந்தால் பரவாயில்லை ஆனால்  இரண்டாவது முறையாக அது நடந்தால் அந்த வீரரின் மனவலியை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கையில், இன்று செஞ்சூரியனில் தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் […]

Dean Elgar 5 Min Read

INDvAUS: டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு..!

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று  ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டி கொண்ட தொடரிலும் விளையாட உள்ளது. முதலில் நடைபெற்ற  ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இன்று இந்தியா-ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி தொடங்கியுள்ளது. இப்போட்டி  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய […]

Australia 3 Min Read

AUSvPAK: 3-ஆம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 241 ரன்கள் முன்னிலை..!

ஆஸ்திரேலியா- பாகிஸ்தான்  அணிகளுக்கு இடையே “பாக்சிங் டே டெஸ்ட்”  போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான அணி முதலில் பந்து வீச தேர்வு செய்து. அதன்படி முதலில் இறங்கிய ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டை இழந்து 318 ரன்கள் குவித்தனர். பாகிஸ்தான் அணியில் அமீர் ஜமால் 3 விக்கெட்டையும், ஷஹீன் அப்ரிடி, மிர் ஹம்சா, ஹசன் அலி தலா 2 விக்கெட்டை பறித்தனர். ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மார்னஸ் லாபுஸ்சாக்னே […]

#AUSvPAK 5 Min Read

SAVIND: 2-ஆம் நாள் முடிவில் தென்னாப்பிரிக்கா 11 ரன்கள் முன்னிலை..!

முதல் நாள் ஆட்ட முடிவில்: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதல் டெஸ்ட்  போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டி நேற்று செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி முதல் நாள் முடிவில் 59 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 208 ரன்கள் எடுத்தனர். களத்தில் முகமது சிராஜ் ரன் எடுக்காமலும், கேஎல் ராகுல் […]

Boxing Day Test 6 Min Read