சசிகலா மற்றும் TTV.தினகரன் ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்கள் என அவர்களுக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் சோதனை நடைபெற்றது. மேலும் அவர்களது உறவினர்கள் பலரது வீட்டில் சோதனை நடைபெற்றது. மொத்தம் 187 இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் ரூ.1,480 கோடி வரி ஏய்ப்பு நடந்துள்ளதாகவும், கணக்கில் வராத தங்கம்-வைர நகைகளும், கோடிக்கணக்கில் பணமும், முக்கிய ஆவணங்களும் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவற்றின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களுக்கு வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் […]
சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்களுக்கு மத்திய அரசாங்கம் வரியை குறைத்துள்ளது. அதில் ஹோட்டல்களுக்கு 18% வரியானது 5%ஆக குறைந்துள்ளது. இருப்பினும் பல ஹோட்டல்களில் இன்னும் விலை குறைப்பு செய்யாமல் உள்ளனர். அதலால் தமிழக பாஜக தலைவர் தமிழிசை அவர்கள் சென்னையில் ஹோட்டல்களில் ஆய்வு மேற்கொண்டார். சென்னை பாண்டிபஜாரில் உள்ள 2 ஓட்டல்களில் இட்லி, வடை, கேசரி, குலோப் ஜாமூன் போன்றவை சாப்பிட்டார். பின் சரக்கு சேவை வரி சரியாக வசூலிக்க […]
புதுச்சேரி அரசு போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்தந்த அடிப்படையில் பணிபுரியும் (PRTC) ஊழியர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் தரத்தை கண்டித்து ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த 18 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக நிரந்தர ஊழியர்களும் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொண்டனர். இப்போராட்டம் இன்னும் 4வது நாளாக தொடர்கிறது. மேலான் இயக்குனர் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்ட போதும் இந்த போராட்டம் தொடர்கிறது. தங்களை தினக்கூலியாக மாற்றும் வரை இப்போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.
வைகையாற்றில் தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள் இன்று மேலூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து மிகுந்த பாதிக்கப்பட்டது. பின்னர் இன்னும் 7 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என முதலமைச்சர் அறிக்கை விடுத்ததன் பின்னர், இப்ப்போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இருப்பினும் இந்த 7 நாட்கள் தண்ணீர் பத்தாது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரிய வழக்கு, 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கு, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீதான உரிமை மீறல் வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் மனுசிங்வி மற்றும் முதலமைச்சர் தரப்பில் வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன்,ஆகிய இருவரும் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை நீதிபதியின் முன்வைத்தனர். மேலும், திமுக […]
நாசரேத் அருகே மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி தாளாளர் செல்வின் தலைமை வகித்தார். நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், பயிற்சி எஸ்ஐ ரகுபதி பாலாஜி ஆகியோர் பேசினர். மேலும் பாதுகாப்பு பயணத்திற்கான உறுதிமொழி படிவத்தை பெற்றோர் மற்றும் சகோதரரிடம் கையொப்பம் வாங்கிவருமாறு அறிவுறுத்தினர். விழா முடிந்ததும் தலைமை ஆசிரியர் ஜான் செல்வராஜ் நன்றி கூறினார்.
தென்னிந்திய திருச்சபையின் (CSI) பெண்கள் ஐக்கிய மாநாடு இந்தமுறை மூன்று நாள் மாநாடு திருச்சியில் தொடங்கியது. இது பிஷப் ஹீபர் கல்லூரியில் கடந்த 17ம் தேதி துவங்கியது. இந்த மாநாடு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்த மாநாட்டை திருச்சி-தஞ்சாவூர் டயோசஸ் நடத்தியது. இந்த நிகழ்ச்சியின் நிறைவு நாளான நேற்று சிஎஸ்ஐ பெண்கள் ஐக்கிய பொதுச்செயலாளர் சிந்தியா ஷோபா ராணி வழிகாட்டுதல் வழங்கினார். டோர்னகால் டயோசஸ் தலைவர் சுவந்தா பிரசாத் ராவ் துவக்கி வைத்தார். தமிழ் […]
திருச்சி : விராலிமலை ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டு செல்லும் வழியில் போலீசார் லாரியை மடக்கி பிடித்தனர். நேற்று திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சியை அடுத்த கைகாட்டி அருகே உள்ள சொரியம்பட்டி விளக்கில் வளநாடு போலீசார் வாகன சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனங்களை சோதனை செய்த போது இது கண்டுபிடிக்கபட்டது. அந்த வண்டியை மடக்கி பிடித்து விசாரித்ததில் இன்னொரு டிப்பர் லாரி மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது.பின்னர் அதனையும் அந்த பகுதி போலீசார் மடக்கி பிடித்தனர். […]
சசிகலா T.T.V.தினகரன் ஆகியோருக்கு சொந்தமான அனைத்து இடங்களிலும் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். மொத்தம் 180 இடங்களுக்கு மேல் சோதனை செய்தனர். இதில் சசிகலாவிற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையும் ஒன்று. தமிழக அரசின் டாஸ்மாக் தனக்கு தேவையான மதுபானங்களை மொத்தம் 11 இடங்களில் இறக்குமதி செய்கிறது. இதில் மிடாஸ் நிறுவனத்தில் தான் அதிகமாக கொள்முதல் செய்யபடுகிறது. வருமானவரித்துறையின் அதிரடி நடவடிக்கையின் காரணமாக இப்போது டாஸ்மாக் தனது கொள்முதலை மிடாஸ் நிறுவனத்தில் செய்வதை நிறுத்தி விட்டது. இதற்க்கு […]
பெரம்பலூர்: ஜெயங்கொண்டம் அருகே வெத்தியார்வெட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் மகன் ராமலிங்கம் இவரது பைக்கை கடந்த 13ம் தேதியன்று தனது வீட்டின் பின்புறம் நிறுத்திவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. பதட்டமடைந்த அவர், இதுகுறித்து மீன்சுருட்டி போலீசில் புகார் செய்தார். அவர் புகார் தெரிவித்ததன் பெயரில் சப்.இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப் பதிந்து உடனே கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி அருகில் உள்ள நாட்டார்மங்கலம் கிராமத்தை சேர்ந்த துரையப்பன் மகன் அசோக்ராஜ் மற்றும் மீன்சுட்டி அருகில் உள்ள […]
ராமநாதபுரம் : கடலாடி அருகே ஆப்பனூர் கருப்பணசாமி கோயில் பொங்கல் திருவிழாவையொட்டி பெரியமாடு, சின்னமாடு இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தயமானது பெரியமாடுகள் போட்டியில் ஆப்பனூர் முதுகுளத்தூர் சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலான போட்டியில் 15 மாட்டுவண்டிகள் கலந்துகொண்டது. இதில் மருகால்குறிச்சி பழனி முதலிடத்தையும், தூத்துக்குடி மாவட்டம், மூலக்கரை முருகன் இரண்டாம் இடத்தையும், வெலாங்குளம் கண்ணன் மூன்றாம் இடத்தையும் பெற்றனர். சின்ன மாடுகள் பந்தயத்தில் அரியநாதபுரம் முதல் தேவர்குறிச்சி வரை […]
பள்ளி மாணவர்களுக்குள் இருக்கையில் அமர்வது சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு, அடிதடியாகி போலிஸ் வரை சென்றுள்ளது. அருப்புகோட்டை அருகே குலசேகரநல்லூர் செல்ல இரண்டு 17 வயது மாணவர்கள் நேற்று முன்தினம் வந்தனர். அவர்கள் அந்த பேருந்தின் டிரைவர் இருக்கை பின் புறம் அமர்ந்தனர். அதே பேருந்தில் வரும் பச்சேரி மாணவர்களுக்கும் இடையே இருக்கை தொடர்பாக பிரச்சனை வந்துள்ளது. இது அடிதடி வரை சென்று குலசேகரநல்லூர் மாணவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனால் அருப்புகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து […]
வேலூர் சேண்பாக்கத்தில் உள்ள ஒரு ஷூ கம்பெனியில் நடந்த சோதனையில் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் அசுத்தமாக இருந்தது. இதனால் அந்த கம்பெனிக்கு ரூ.5000 அபராதமும், இதேபோல் அதேபகுதியில் ஒரு லெதர் கம்பெனியிலும் டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் பொருட்கள் இருந்ததால் அந்த கம்பெனிக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதித்தனர் இச்சம்பவம், பயிற்சி கலெக்டர் ஸ்ரீகாந்த், தாசில்தார் பாலாஜி தலைமையிலான மாநகராட்சி பணியாளர்கள் டெங்கு தடுப்பு ஆய்வு மேற்கொண்டபோது நடைபெற்றது.
நேற்று நள்ளிரவில் மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா இருந்த போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடைபெற்றது, அதில் சில லேப்டப்கள், பென்டிரைவ்கள், ஜெயலலிதாவிற்கு வந்த பல கடிதங்களை பறிமுதல் செய்துள்ளதாக T.T.V.தினகரன் அவர்கள் தூத்துக்குடியில் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, இந்நிலையில் இது குறித்து T.T.V.தினகரன் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ரூமிற்கு சோதனையிட வேண்டுமென கூறினார், நான் வாரன்ட் இருக்கிறதா என கேட்டேன், அவர்கள் இல்லை என கூறியதால் […]
போயஸ் கார்டனில் வருமானவரி சோதனை நடத்தப்பட்டது இரவு 9.30 மணிக்கு தொடர்ந்த சோதனை தொடங்கியது முதர்கட்டமாக அங்கு இருக்கும் அறைகளின் சாவி தினகரனிடம் இருப்பதால் அவரை அழைத்தனர் ,அடுத்தபடியாக போயஸ் கார்டனில் சோதனையை தொடர்ந்து சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறை முடிவு செய்துள்ளனர் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் நடைபெற்று வரும் வருமானவரிச் சோதனை குறித்து டிடிவி தினகரன் இது ஜெயலலிதாவின் ஆன்மாவுக்குச் செய்யப்படும் துரோகம் எனத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பதிவில், “போயஸ்கார்டனில் […]
2010ஆம் ஆண்டு மதுரை மாவட்டம் பேரையூர் அருகேயுள்ள சந்தையூரில் தெற்கு தெருவைச் சேர்ந்த குருசாமி மகன் அஜித்குமார் (12).இவர் சத்திரம் வண்டிப்பாதையில் சைக்கிள் ஒட்டி கொண்டிருந்தபோது சைக்கிள் பளுதாகியதால் அதனை சரி செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எஸ்.கீழப்படியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஜோதிராஜ் (29) செல்போன் பேசியபடி ஓட்டி வந்து அஜித்குமார் மீது மோதினார். இதில் சம்பவ இடத்திலேயே அஜித்குமார் உயிரிழந்தார். இந்த வழக்கு பேரையூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த பேரையூர் மாஜிஸ்திரேட் ராஜமகேஷ், […]
திருச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் 312 பேர் பங்குபெற்றனர். 120 பேர் பரிசு பெற தகுதிபெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் அண்ணா விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது. இதனை கலக்டர் ராஜாமணி தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன் வரவேற்றார். கலைபண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் புன்னியமூர்த்தி, சிறப்பு ஒலிம்பிக் இயக்குனர் பால்தேவசகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருச்சி, நவ.17: திருச்சியில் நேற்று […]
திருச்சி: திருச்சியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் வழியில் மண்ணச்சநல்லூரில் பங்குனி வாய்க்கால், புள்ளம்பாடி வாய்க்கால், பெருவளை வாய்க்கால் பாலங்கள் பழுதடைந்ததால் புதிதாக கட்டப்பட்டு வருகிறதன. அதலால் தற்காலிக பாலங்கள் அமைக்கப்பட்டன. இந்த பாலங்கள் கட்டும் வேலைகள் நடைபெறுவதால் பஸ்கள் சுற்றி செல்கின்றன. இதனால் பாலத்தின் அருகே தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்தகோரி நேற்று பாதிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். புள்ளம்பாடி வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால் தற்காலிக பாலமும் அடிக்கடி சேதமடைந்ததால் அங்கேயும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதலால் […]
சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களுக்காக 72 ஆண்டுகளாக சேவை செய்துவரும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கமானது 2011ஆம் ஆண்டு முதல் வருடம்தோறும் திருச்சி, பெரம்பலூர் மாவட்டங்களை ஒன்றினைத்து திருச்சி யூனியன் என்கிற பெயரில் சிறப்பு முகாம்களை நடத்திவருகிறது. இந்த அமைப்பு 100 கிளைகளுடன் செயல்படுகிறது. அதன்படி இந்தாண்டும் காவிரி கறையின் இரு இடங்களிலும் நவம்பர் 16 (வியாழன்) அன்று தொடங்கியது. ஸ்ரீரங்கம் அம்மா மண்டபசாலையில் காவிரி புஷ்கரம் நடந்த இடத்திலிலும் (கோனார் சத்திரம் எதிரில்) ஒரு […]
திருச்சி to சென்னை இடையே செல்லும் மலைகோட்டை எக்ஸ்பிரஸ் திருச்சி வழ் மக்களின் பயன்பாட்டை கருத்தில் கொண்டே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் கும்பகோணம் மார்க்கமாக அகலபாதை பயணிகளுக்காக மாற்றப்பட்ட தடத்தை பல்வேறு போராட்டங்களுக்கு இடையே மீட்டு 2015ஆம் ஆண்டு இறுதி முதல் திருச்சியிலிருந்து இயக்கபடுகிறது. ஆனால் தற்போது ரயில்வே துறை எடுக்கும் அதிரடி நடவடிக்கை காரணமாக மலைகோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். முதலில் இந்த ரயில் அதி விரைவு வண்டி என கூறி […]