இன்று சகலகலா வித்தகர் திரு.கொத்தமங்கலம் சுப்பு (Kothamangalam Subbu) அவர்களின் 107 வது பிறந்த தினம். 10 நவம்பர் 1910 கொத்தமங்கலம் சுப்பு கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், திரைப்பட இயக்குநர், கதை வசனகர்த்தா, வில்லுப்பாட்டிசைக் கலைஞர் என்று மட்டுமல்லாது பத்திரிக்கையாளர், துணைஆசிரியர், நாடகநடிகர் என்று பன்முகங்கள் கொண்ட அறிஞராக அறியப்பட்டார். மிகப் பிரபலமான தில்லானா மோகனாம்பாள் தொடர்கதையை ஆனந்த விகடனில் கலைமணி என்ற புனைபெயரில் எழுதியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது இவருக்கு 1967 ஆம் […]
2வது நாளாக வருமான வரி சோதனை தொடர்வதால் சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் உள்ள ஜாஸ் சினிமாஸ் தியேட்டரில் 2ம் நாளாக காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.
தொடர்மழை காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது . கடந்த சில நாட்களாக பெய்து வந்த தொடர் மழையால் அம்பாசமுத்திரம் அருகே உள்ள பாபநாசம் அணை 100 அடியை எட்டியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பாபநாசம் அணை அதன் முழு கொள்ளவான 143 அடியை எட்டியுள்ளது.
தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நாளை முதல் தமிழகத்தின் கடலோர பகுதியில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வட கிழக்கு பருவமழை இது குறித்து வானிலை மையம் தெரிவித்தது, `அந்தமானை ஒட்டியுள்ள மலேசிய கடல்பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுபகுதி தொடர்ந்து அதே இடத்தில் நீடிப்பதாலும், வெப்பச்சலனம் காரணமாகவும் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட […]
கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முன்னால் மாணாவர் ஒருவர் இயற்கையாக கிடைக்கும் உரங்களை பயன்படுத்தி வெண்டை செடியை வளர்த்துள்ளார். அதில் வளர்ந்த வெண்டைக்காய் கின்னஸ் சாதனைக்கு அனுப்பும் அளவில் வளர்ந்துள்ளது இதை அனுப்புவது குறித்து அந்த குழு ஆராய்ந்து வருகின்றனர் .முதலில் இயற்கை உரத்தை பயன்படுத்தி அதை வளர செய்ததே பெரும் சாதனை ஆகும்.இந்த வெண்டைக்காய் 40.2 சென்டி மீட்டர் நீளம் ஆகும் .
தமிழகத்தில் கனமழை தொடர்ந்து பெய்து வருகின்றது.இந்நிலையில் இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியது , தாழ்வான பகுதிகளில் வீடு கட்டியதால் தான் மழை வெள்ளம் சென்னையில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தங்குவதாக கூறியுள்ளார்.இது குறித்து மத்திய அரசிடம் 1500 கோடி […]