டெல்லியிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் சிறப்பு ரயில் இன்று அதிகாலை திருச்சி வந்தது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதுவரை இந்தியாவில் இந்த வைரஸால், 95,698 பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், வெளி மாநிலங்களுக்கு சென்றவர்களும் மீண்டும் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல இயலாமல் தவித்து வருகின்றனர். தற்போது மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் சில தளவுகளை […]
திருச்சியில் இரண்டு நாட்களிலேயே வெறிசோடிய மதுக்கடைகள். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில், கடந்த 45 நாட்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த மதுக்கடைகள், மே-7ம் தேதி முதல் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழக அரசின் இந்த முடிவுக்கு, அரசியல் கட்சி பிரபலங்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் எதிர்ப்பு […]
திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக ஆட்சியர் சிவராசு பேட்டி. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகளைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருச்சியில் மொத்தம் 51 பேர் […]
திருச்சி மத்திய சிறை கைதிகளால் தயாரிக்கப்பட்ட 1 லட்சம் மாஸ்க்குகளை சிறை அங்காடியில் பெற்றுக்கொள்ளலாம் என்று சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதை பின்பற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளதால் மருத்துவ உபகரணங்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் வீட்டில் முடங்கியுள்ள மக்கள் […]
ஊரடங்கு உத்தரவை மீறி கிரிக்கெட் விளையாடிய இளைஞர்கள் ட்ரொனை பார்த்ததும் ஓட்டம் பிடித்தனர். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து இந்தியா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், திருச்சியில் காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லாத பகுதியில், இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்துள்ளனர். இதனையடுத்து, போலீசார் காவிரி பாலத்தின் அருகே […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஒரு கோடியே 99,97,666 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 697 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இதுவரை 21 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் நேற்றோடு அது முடிவடைந்து, தற்போது மீண்டும் இந்திய பிரதமர் மோடி 19 நாட்களுக்கு அதிகரித்து, மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில், ஓய்வின்றி தன்னலம் பாராது உழைத்து வரும் காவல் ஆய்வாளர்கள் […]
உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பல்வேறு கடைகள் கல்விக்கூடங்கள் ஆலயங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கடைகளும், அத்தியாவசிய கடைகள், மளிகை கடை காய்கறி கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவைகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது […]
கொரோனா தொற்றை தடுக்க இந்தியா முழுதும் 21 நாட்கள் லாக்-டவுன்எனப்படும் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் இந்த ஊரடங்கு மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு பெரிய தலைவலியை சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து திருச்சியில் சில தினங்களுக்கு முன்பாக 2 கடைகளின் கதவு கடைகள் உடைக்கப்பட்டு மதுபாட்டில்கள் திருடப்பட்டன. இதனையடுத்து மதுபாட்டில்களை மதுப்பிரியர்களிடமிருந்து பாதுகாக்க திருச்சி மாநகராட்சி சார்பில் புதிய முறையை கையாண்டுள்ளது. அதாவது, அனைத்து மதுபாட்டில்களையும் ஒரே இடத்துக்கு மாற்றி அங்கு காவலர்கள் மூலம் பலத்த பாதுகாப்பு போட […]
திருச்சி மாவட்டம் குழுமணியை சேர்ந்தவர் பெரியசாமி . இவர் ஒரு விவசாயி ஆவார். இவர் தனக்கு சொந்தமான 1 ஏக்கரில் வாழை சாகுபடி செய்துள்ளார். 10 நாட்களுக்கு முன் வாழை தார்களை அறுத்து, லாரியில் கேரளாவுக்கு கொண்டு சென்றார். இதனையடுத்து, அங்கு கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளுக்குள் முடங்கி இருந்ததால், வாழைத்தார்கள் சரியாக விலை போகவில்லை. மிக குறைந்த விலைக்கு வாழைத்தார் விற்றதால், பெரியசாமிக்கு பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, வாழை சாகுபடிக்கு வாங்கிய கடனை […]
முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 1,400 சிறை கைதிகளின் உறவினர்கள் கூட்டம், கூட்டமாக சிறைக்கு வந்து செல்கின்றனர். கொரோன வைரஸ் தொற்றின் காரணமாக இதனை தவிர்க்க வரும் 14 தேதி வரை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு […]
கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸானது சீனாவில் பரவி, அதனை தொடர்ந்து, மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. அப்போது இந்த வைரஸானது இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இந்த வைரஸானது தமிழகத்தையும் தாங்கியுள்ளது. தமிழகத்தில், இந்த வைரஸ் பாதிப்பால் மொத்தம் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது திருச்சியில் ஒரு குழந்தை உட்பட மொத்தம் 9 பேர் காய்ச்சல், இருமல், சளி அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை தொடங்குகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மாசி தெப்பத்திருவிழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 6ந் தேதி வரை நடைபெறுகின்றது. தெப்பத்திருவிழாவின் முதல் நாள் சுவாமி ஹம்ச வாகனத்திலும், 2வது நாள் ஹனுமந்த வாகனத்திலும், 3வது நாள் கற்பகவிருட்ச வாகனத்திலும், 4வது நாள் வெள்ளி கருட வாகனத்திலும், 5வது நாள் இரட்டை பிரபை வாகனத்திலும், 6வது நாள் யானை வாகனத்திலும் நம்பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். […]
பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதால் 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டனர். இதையடுத்து நீதிமன்றம் வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளது. திருச்சி பிராட்டியூரில் உள்ள ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரியில் 3 மற்றும் 4ம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். ஆசிரியர்கள் தடுத்தும் இந்த மோதல் நடைபெற்றதால் கல்லூரியில் பரபரப்பு காணப்பட்டது. பின்னர் இந்த மோதலுக்கு காரணமான 28 மாணவர்கள் மீது போலீசார் எப்.ஐ.ஆர் பதிவு […]
உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி மருத்துவமனையில் அனுமதித்த போது வயிற்றில் இறந்த நிலையில் 5 மாத சிசு இருந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி பீம நகரைச் சோ்ந்தவரான 21 வயது நிரம்பிய மாணவி, தனியாா் கல்லூரியில் பி.காம். படித்து வருகிறாா். இந்நிலையில் சிலநாட்களாக உடலில் ஏற்பட்ட உபாதைக்காரணமாக வீட்டில் ஓய்வெடுத்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த 6ந்தேதி வயிற்றுவலி அதிகரித்து கதறி உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவடைய பெற்றோா் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் […]
திருச்சி அருகே கணவரை காணவில்லை என்று ஒரு பெண் புகார் அளிக்க வந்துள்ளார் புகார் அளிக்க வந்தவரை மயக்கி குடும்பம் நடத்தியாக தலைமைக்காவல் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் அருகே உள்ள புலிவலத்தைச் சேர்ந்தவர் சிராஜுநிஷா என்பவரின் தம்பி முகம்மது ஜக்ரியா இவர் ஒரு பெண்ணை 7 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளார். சில தினத்திற்கு முன் மனைவியை கைவிட்டு வேற ஒரு பெண்ணுடன் அவர் தலைமறைவாகி […]
சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து 1,008 குடங்களில் எடுத்துவரப்பட்ட புனித நீர் யாக சாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம் அருகே கட்டப்பட்டு உள்ள சீரடி சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அக்கரைப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளாக வடமாநிலத்தில் அமைந்துள்ள சீரடி சாய்பாபா கோவிலை போன்ற தோற்றத்தில் நேர்த்தியான கட்டிடக்கலையுடன்ர் சுமா 20 ஏக்கர் பரப்பளவில் 60 ஆயிரம் அடி சதுர அடியில் ரூ.30 […]
கழிவறையில் மகாகவி பாரதியின் புகைப்படம் இடபெற்றுள்ளதற்கு பொதுமக்கள் தமிழ் ஆர்வலர்கள் கடும் கண்டனம் திருச்சி புத்தூரில் அமைச்சர் திறந்து வைத்த கழிப்பறை கட்டிடத்தில் மகாகவி பாரதியாரின் புகைப்படும் வைக்கப்பட்டுள்ளது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம் புத்தூரில் உள்ளது மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனை இதன் அருகே வயலூர் சாலைப் பகுதியில் பேருந்து நிறுத்தம் ஒன்று உள்ளது. இந்நிலையில் நாள்தோறும் இங்கு சோமரசன்பேட்டை மற்றும் அல்லித்துறை ஆகிய பகுதிகளுக்குச் செல்ல ஏராளமான பயணிகள் பேருந்துக்காகக் […]
தமிழகம் முழுவதும் ஜன.,15 ந்தேதி தைத்திருநாள் களைக்கட்டும் ஜல்லிக்கட்டுத் திருவிழா திருச்சியில் 4 நாட்கள் ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு அனுமதி அளித்து உத்தரவு தமிழகம் முழுவதும் ஜன.,15 தைத்திருநாள் கொண்டாடப்படுகிறது.பொங்கல் அன்று அவரவர் சொந்த ஊர்களில் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.பொங்கல் சிறப்பு என்றால் அதனோடு மங்காத வீரத்தினை எடுத்துரைக்கும் ஜல்லிக்கட்டு மற்றொரு சிறப்பாகும்.அன்று சீறிப்பாயும் காளைகலும் அதனை அடக்க சீறிப்பாயும் இளங்காளையர்களும் என்று தமிழகமே ஜே ஜே என்ற கரகோஷத்திற்கு பஞ்சமிருக்காது.அவ்வாறு கலைக்கட்டும் திருவிழாவாக ஜல்லிக்கட்டு […]
வடமாநிலத்தவர்களால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது.தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும். திருச்சி மற்றும் புதுக்கோட்டையில் தமிழ் தேசிய கட்சியினர் வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் வடமாநிலத்தவர்களால் இங்குள்ள தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுவதாகவும் வடமாநிலத்தவர்கள் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டும் எனக்கூறி தமிழ் தேசிய கட்சியினர் வடமாநிலத்தவகளின் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டத்தை அறிவித்தனர்.அதன்படி நேற்று வடமாநிலத்தை சேர்ந்தவரிகளின் 4 கடைகளுக்கு தமிழ் தேசிய கட்சியினர் பூட்டு போட்டு அருகே துண்டு பிரசுரங்களையும் […]
திருச்சியில் நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். பின்னர் மதிக்குமார் என்ற இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்து, தலையில் கல்லைப்போட்டு கொலை செய்ததாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டம் மணிகண்டம் அடுத்துள்ள வடக்கு நாகமங்கலம் பகுதியை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவியை காணவில்லை என, அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி […]