கோவிட்-19 : 2019ஆம் ஆண்டு சீனாவில் உருவாகி, பரவ தொடங்கி சுமார் 2 ஆண்டுகள் உலகையே உலுக்கிய கொரோனா பெருந்தொற்று பற்றி தற்போது மேலும் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுக்கு காரணமான SARS-CoV-2 எனும் வைரஸ் மனித மூளையை பாதிக்க செய்யும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த வைரஸ் மனித செல் புரதத்தில் உள்ள பிறழ்வுகளின் வழியாக மூளை செல்களுக்கு நுழையும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதனை சில கொரோனா தொற்று நோயாளிகளிடம் […]
டெல்லி : ரஷ்யா – உக்ரைன் போருக்கு நடுவே இந்தியாவின் அகிம்சை பாதையில் பிரதமர் மோடி மேற்கொள்ளும் ராஜதந்திர செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாயவை முன்னிலைப்படுத்துகிறது. ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 2022 பிப்ரவரியில் தொடங்கி தற்போது வரையில் பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. பல்வேறு உலக நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாகவும், சில நாடுகள் ரஷ்யாவுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது இரு நாட்டுக்கும் ஆதரவு என்ற சமநிலையில் உள்ளது. […]
ரஷ்யா : உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்ய நாட்டின் எண்ணெய்க் கிணறு கொழுந்து விட்டு எரிவதாக அந்நாட்டுச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2022 ஆண்டு பிப்ரவரி முதல் தற்போது வரையில் ரஷ்யா – உக்ரைன் இடையே போர் இடைவிடாமல் நடந்து வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டும் வருகிறது. ஆனாலும், இந்த போர் முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்த ஒரு தீர்மானத்தையும் இரு நாடுகளும் இது வரை எடுத்ததாக தெரியவில்லை. […]
சூடான் : கிழக்கு சூடானில் அணை இடிந்து விழுந்ததில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. குடியரசு ஆப்பிரிக்கக் கண்டத்தில் அமைந்துள்ள கிழக்கு சூடானில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக அணை ஒன்று உடைந்து விபத்துக்குள்ளானது. உடைந்த அணையில் இருந்து வெளியேறிய நீரில் அடித்துச் செல்லப்பட்டதில் 30 பேர் உயிரிழந்தனர்என்று ஐக்கிய நாடுகள் சபையின் அவசரகால நிவாரண நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த சம்பம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சூடானின் வடமேற்கு செங்கடல் […]
அமெரிக்கா : ஜோ பைடன் தூங்கிக் கொண்டு இருப்பதால் மூன்றாம் உலகப்போர் நடைபெற வாய்ப்பு உள்ளது என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அமெரிக்காவில் நாளுக்குநாள் நடைபெறப் போகும் அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்பது தீவிரமடைந்து வருகிறது. அதில் மாநாட்டில் மூலமாக ஜனநாயக கட்சியும் தங்களது பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். இதனால், ஆரம்பத்தில் முன்னாள் அதிபரும் தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்டு ட்ரம்ப்புக்கு ஆதரவு எப்படி இருக்கிறதோ, அதற்கு இணையாகவே ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரும் தற்போதைய துணை வேட்பாளருமான […]
பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் […]
ரஷ்யா : பிரபல செய்தி பரிமாற்ற செயலியான டெலிகிராம் தலைமை செயல் அதிகாரி ஃபிரான்சில் கைது செய்யப்பட்டார். செய்தி பரிமாற்ற செயலியான ‘டெலிகிராம்’-யை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸின் போர்கெட் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அஜர்பைஜான் நோக்கி பிரைவேட் ஜெட்டில் பயணித்த அவரை பாரிஸ் போலீசார் கைது செய்து, விசாரித்து வருகின்றனர். அவர் மீது, தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை டெலிகிராம் தளம் […]
உக்ரைன் : பிரதமர் மோடி உக்ரைனுக்குப் பயணம் மேற்கொண்ட நிலையில், இந்தியாவுக்கும்- உக்ரைனுக்கும் இடையே 4 ஒப்பந்தங்கள் கையொப்பமாகி இருக்கின்றன. போலந்தில் 2 நாள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி, ‘ரெயில் ஃபோர்ஸ் ஒன்’ மூலம் உக்ரைன் தலைநகர் கீவ்வை நேற்று அடைந்தார். உக்ரைன் தனி நாடாக மாறிய பின்னர் அங்குச் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தான் என்று பெருமையையும் இதன் மூலம் படைத்தார். அங்குப் பிரதமர் மோடி சென்ற போது உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி […]
கனடா : பிரபல கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மற்றும் ஹெய்லி தம்பதியினர் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர். 30 வயதாகும் ஜஸ்டின் பைபர் (Justin Bieber) இந்தியாவிலும் 20 வயதிலே மிகவும் பிரபலமானவர், குறிப்பாக 90ஸ் கிஸ்ட்களுக்கு கூட இவரை பற்றி தெரியும். அதற்கு காரணம், இவரது பாடல்கள் தான். அதிலும் முக்கியமாக ‘baby baby baby oh’ பாடல் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பைபர் மற்றும் […]
உக்ரைன் : அரசுமுறை பயணமாக “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று, போலாந்தில் இருந்து ரயில் மூலம் உக்ரைனுக்கு பயணத்தை தொடங்கினார். அவர், “டிரைன் ஃபோர்ஸ் ஒன்” என்று அழைக்கப்படும் ரயில் மூலம் உக்ரைனுக்கு சென்றடைந்தார். ரஷ்யா- உக்ரைன் மோதல் காரணமாக உக்ரைனில் உள்ள அனைத்து விமான […]
உக்ரைன் : போலந்து நாட்டில் இருந்து உயர் பாதுகாப்பு கொண்ட ரயில் மூலம் பயணித்து இந்திய பிரதமர் மோடி உக்ரைன் நாட்டிற்கு இன்று காலை (அந்நாட்டு நேரப்படி) சென்றுள்ளார். கடந்த 21, 22 ஆகிய தேதிகளில் போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி இன்று உக்ரைன் நாட்டிற்கு வந்துள்ளார். போலந்து நாட்டு பயணத்தில் அந்நாட்டு பிரதமர் டோனல்ட் டஸ்குடனான சந்திப்புக்கு பிறகு பிரதமர் மோடி கூறுகையில், “இந்தப் பயணத்தில் அமைதியை நிலைநாட்டத் தேவையான […]
அமெரிக்கா : நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார் பில் கிளிண்டன். இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரச்சாரத்தை இரு கட்சியினரும் தீவிரமாக செய்து வருகின்றனர். ஜனநாயக கட்சியின் சார்பாகப் போட்டியிடவுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த பிரச்சாரத்தில் ஒரு பகுதியான ஜனநாயக கட்சி தங்களது மாநாட்டை நடத்தி வருகிறது. கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி […]
அமெரிக்கா : ஜனநாயக கட்சியின் தேசிய மாநாட்டில் நேற்று உரையாற்றிய பாரக் ஒபாமா, கமலா ஹாரிஸுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ஆதரவாகவும் பேசியுள்ளார். ஜனநாயக கட்சியின் மாநாடு ..! இந்த ஆண்டின் இறுதியில் நவம்பர்-5ம் தேதி அமெரிக்கா அதிபர் தேர்தலானது நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான பிரசாரத்தில் இரு கட்சியினரும் முனைப்பாக இருந்து வரும் நிலையில், நேற்று ஜனநாயக கட்சியின் தேசிய மாநாடானது சிகாகோ நகரத்தில் நடைபெற்றது. இந்த மாநாடானது கடந்த ஆகஸ்ட்-19 ம் தேதி தொடங்கி, வரும் ஆகஸ்ட்-22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. […]
அமெரிக்கா : இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த போரை இஸ்ரேல் நிறுத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் போர் ..! இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த போரால் பெரும் பதற்றமான சூழல் என்பது நிலவி வருகிறது. இந்த போரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலாக ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் மொத்தமாக 40,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் […]
ஆப்பிரிக்கா : தற்போது ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வரும் குரங்கம்மை தொற்று பாதிப்பு குறித்து உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கம்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இன்று ஆலோசனை மேற்கொண்டார். 2019இல் சீனாவில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று 2020, 2021 என இரு ஆண்டுகள் உலகையே ஆட்டிப்படைத்தது. அதனால் லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கானோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. உலகளாவிய ஆராய்ச்சியாளர்களால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அந்த பெருந்தொற்றில் இருந்து மக்கள் மீண்டு வந்தனர். தற்போதும் அதன் பாதிப்புகள் உலகில் ஆங்காங்கே இருந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படியான சூழலில், […]
அமெரிக்கா : அமெரிக்கா அதிபருக்கான தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்பும், உலக பணக்காரர்களுள் ஒருவரான எலான் மஸ்கும் இணைந்து நடனம் ஆடும் வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அதிபர் ட்ரம்ப்பும், தற்போதைய துணை பிரதமரான கமலா ஹாரிஸும் அதிபர் தேர்தலில் களம் காணவுள்ளனர். இதனால் அங்குத் தேர்தல் களம் சூடு பிடித்து இருக்கிறது. பல தொழிலதிபர்கள் இரு தரப்பினர்களுக்கும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதில், பெரும் அளவு ஆதரவு என்பது […]
ஜெனிவா : இந்த ஆண்டில் இதுவரை பல நாடுகளில், குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு குரங்கு அம்மை நோய் தீவிரமாக பரவி வருவதால் அனைத்து மக்களும் முன் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்துள்ளது. குரங்கு அம்மை என்றால் என்ன? குரங்கு அம்மை (Mpox) என்பது ஒரு ஜூனோசிஸ் ஆகும், இது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் ஒரு நோயாகும். இது பெரும்பாலும் வெப்பமண்டல மழைக்காடுகளுக்கு அருகில் வாழும் உயிரங்களுக்குப் பரவக் கூடிய தொற்று நோயாகும். […]
அமெரிக்கா : ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் வரும் வெள்ளியன்று அமெரிக்க பொருளாதார கொள்கைக்கான பிரச்சார அறிக்கையை வெளியிட உள்ளார். வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரங்களில் டொனால்ட் டிரம்ப், கமலா ஹாரிஸ் என இருவரும் மிகத் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடுகின்றனர். மேடை பிரச்சாரங்கள், நேர்காணல்கள் என மிகத் தீவிரமாக ஈடுபட்டு வரும் டொனால்ட் டிரம்ப், அண்மையில் கூட எலான் மஸ்க் உடன் எக்ஸ் பக்கத்தில் “எக்ஸ் ஸ்பேஸ் ” நிகழ்ச்சி வரையில் […]
அமெரிக்கா : டொனால்ட் டிரம்ப் உடனான ” எக்ஸ் ஸ்பேஸ் ” உரையாடலை தொடர்ந்து எலான் மஸ்க், அடுத்ததாக கமலா ஹாரிஸுக்கு “எக்ஸ் ஸ்பேஸ்”-இல் பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வருடம் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் இந்த தேர்தலில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பாக அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி அதிபர் வேட்பாளராக முன்னாள் அமெரிக்க அதிபர் […]
வங்கதேசம் : இந்தியாவின் சுதந்திரம் , பாகிஸ்தான் பிரிந்து சென்ற காலத்திற்கு பின்பிருந்து, 1971க்கு முன்பு வரையில் வங்கதேசம் என்ற நாடு இல்லை. வங்கதேச நாட்டின் பெயர் கிழக்கு பாகிஸ்தான். தற்போதைய பாகிஸ்தான் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்தது வங்கதேசம். 1971 கலவரம் : அந்த சமயம், 1970ஆம் ஆண்டு கிழக்கு பாகிஸ்தானில் (வங்கதேசம்) நடைபெற்ற தேர்தலில் ஷேக் முஜ்புர் ரஹ்மான் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதை அடுத்து ‘வங்கதேசம்’ தனி நாடு கோரிக்கையை இந்தியாவின் ஆதரவோடு முன்னிறுத்தினார். இந்திய […]