காசாவில் நடந்து வரும் போரால் மாலத்தீவுகளில் மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் பாஸ்போர்ட்டை கொண்டவர்களுக்கு நாட்டு நுழைவைத் தடை செய்வதாக மாலத்தீவு அரசு அறிவித்துள்ளது. மாலத்தீவின் அதிபர் அலுவலகம், கடந்த ஞாயிற்றுக்கிழமை, வெளியிட்டுள்ள அறிவிப்பில் இஸ்ரேல் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு நுழைவைத் தடுக்க சட்ட மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்ததாகவும், இந்த செயல்முறையை கண்காணிக்க ஒரு துணைக்குழுவை அமைப்பதாகவும் அறிவித்தது. அதிபர் முகமது முவிசு பாலஸ்தீன மக்களின் தேவைகளை மதிப்பீடு செய்ய சிறப்பு தூதரை நியமித்து, நிதி […]
ஆப்கானிஸ்தான் : கிழக்கு மாகாணத்தில் இன்று (ஜூன் 1) காலை ஆற்றைக் கடக்கும் போது படகு ஒன்று மூழ்கியதில், குழந்தைகள் உட்பட குறைந்தது 20 பேர் உயிரிழந்ததாக தலிபான் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். முகமந்த் தாரா மாவட்டத்தில் ஆற்றைக் கடக்கும்போது அந்த படகு மூழ்கியதாகவும், அதில் சிக்கி பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20 பேர் உயிரிழந்தனர். படகில் 25 பேர் பயணம் செய்ததாகவும், தற்போது அவர்களில் ஐந்து பேர் மட்டுமே உயிர் பிழைத்துள்ளனர் என்றும் […]
பாகிஸ்தான் : அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 28 பேர் உயிரிழந்தனர். பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் இன்று (புதன்கிழமை) அதிகாலை அதிவேகமாக சென்ற பயணிகள் பேருந்து ஒன்று நெடுஞ்சாலையில் இருந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் குறைந்தது 28 பேர் பலியாகினர், 20 பேர் காயமடைந்தனர். பலுசிஸ்தான் மாகாணத்தின் இரண்டாவது பெரிய நகரமான டர்பத்தில் இருந்து மாகாணத்தின் தலைநகரான குவெட்டாவிற்கு பேருந்து சென்று கொண்டிருந்த போது, வாசுக் நகரில் திடீரென பேருந்து […]
பப்புவா : பயங்கரமான நிலச்சரிவு பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட நிலையில், அதில் சிக்கி 2,000க்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டுள்ளனர். கடந்த மே 24-ஆம் தேதி பப்புவா நியூ கினியாவின் யம்பலி கிராமத்தின் முங்காலோ மலையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிருடன் மண்ணிற்குள் புதையுண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலச்சரிவில், 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து ராணுவம், தேசிய மீட்புக் குழுவினற்கு […]
அமெரிக்கா : தென் மாநிலங்களில் பலத்த சூறாவளி காற்று காரணமாக 15 பேர் உயிரிழந்தனர். டெக்சாஸ், ஆர்கன்சாஸ் மற்றும் ஓக்லஹோமா உள்ளிட்ட பல மாநிலங்களை சூறாவளி மற்றும் பிற தீவிர புயல்கள் தாக்கியதில் மத்திய அமெரிக்காவில் 15 பேர்உயிரிழந்ததாக கூறப்படுகிறது. கடந்த சனிக்கிழமை இரவு முதல் வீச தொடங்கிய சூறாவளி வீசியதன் காரணமாக, அமெரிக்காவின் பல தென் மாநிலங்களில் மின்சாரம் இல்லாமல் தவித்து வருகின்றனர். புயலால் பாதிக்கப்பட்ட டல்லாஸ் நகரத்திற்கு வடக்கே டெக்சாஸின் டென்டன் கவுண்டியில் உள்ள […]
ரஃபா : இஸ்ரேல் மீது ராக்கெட்டுகளை வீசி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதால் அதற்கு இஸ்ரேல் ராணுவம் பதிலடி கொடுத்திருக்கிறது. பாலஸ்தீனத்தை இஸ்ரேலரின் கைகளில் இருந்து விடுவிக்க பல்வேறு ஆயுதங்கள் ஏந்திய அமைப்புகள் செயலாற்றி வருகிறது. அந்த அமைப்புகளில் ஒன்று தான் ஹமாஸ் அமைப்பு. கடந்த ஆண்டில் இந்த அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் 200 நாட்களுக்கும் மேலாக காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது கொடூர […]
அமெரிக்கா: 400,000 டாலர் கடன் தொகையை திருப்பி கேட்டுவிட கூடாது என்பற்காக அமெரிக்க ஊழியர் தனது முதலாளியை 2020இல் தலையை வெட்டி கொலை செய்தது தற்போது கண்டறியப்பட்டுள்ளது. வங்கதேசத்தை பூர்வீகமாக கொண்ட டைரஸ் ஹாஸ்பில் எனும் இளைஞர், 33 வயதான அமெரிக்காவை சேர்ந்த இளம் தொழிலதிபர் ஃபாஹிம் சலேவிடம் 2020 ஜனவரியில் பணிக்கு சேர்ந்துள்ளார். சலேயின் நிதி மற்றும் தனிப்பட்ட விஷயங்களை கையாண்ட பெர்சனல் உதவியாளராக டைரஸ் ஹாஸ்பில் செயல்பட்டு வந்துள்ளார். ஆரம்பம் முதலே பல்வேறு நிதி […]
ரஃபா: காசாவின் ரஃபா நகரில் நடைபெற்று வரும் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையை ஆதரிக்கும் நீதிமன்றம், ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில் தெற்கு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தொடங்கியது. இந்த நிலையில், இஸ்ரேலை இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் பிரிட்டோரியா நடவடிக்கைக்கு அழைப்பு விடுத்த […]
இஸ்ரேல்: இஸ்ரேல் மீதான தாக்குதலின் போது என் தந்தை ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். பின்னர் நான் செய்தேன் என ஹமாஸ் அமைப்பை சேர்ந்த இளைஞர் வாக்குமூலம் அளித்துள்ளார். கடந்த 2023 அக்டோபர் மாதம் பாலஸ்தீனிய ஆதரவு அமைப்பான ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதலின் போது இஸ்ரேலை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு தற்போது வரையில், […]
கபோசு : மீம்ஸ்களின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான ‘கபோசு’ நாய் உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. உலகம் முழுவதும் மீம்ஸ் மூலம் பிரபலமான விஷயங்களில் கபோசு (Kabosu) நாயையும் முக்கிய இடத்தில் இருக்கும் என்றே கூறலாம். இந்த நாய் கொடுக்கும் ரியாக்ஸன் மனிதர்கள் போலவே காமெடியாக இருந்த காரணத்தால் உலகம் முழுவதும் பிரபலமானது. பலரும் இதனை மீம்ஸ்களின் ராஜா என்று கூட கூறுவார்கள். அந்த அளவுக்கு பல வகை ரியாக்சன் கொடுத்து நம்மளை மீம்ஸ் மூலம் சிரிக்க […]
மெக்சிகோ: ஆண்களின் விதைப்பையில் சிறிய அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இருக்கிறது என்றும் இதனால் கருவுறுதலில் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் மெக்சிகோ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். உலகளாவில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு என்பது நமது சுற்றுசூழலுக்கும், மனிதர்களுக்கும் பாதிப்பு என்று கூறினாலும் பிளாஸ்டிக் என்பது மனித வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறி உள்ளது. வெளிப்புறத்தில் இருக்கும் பிளாஸ்டிக் குறிப்பிட்ட சில ரசாயனம் கலந்த உணவு பொருட்கள் வாயிலாகவோ, சுவாச குழாய் வாயிலாகவோ சிறிய அளவில் மைக்ரோ துகள்களாக மனித உடலில் கலந்துள்ளது […]
சென்னை: ஸ்பெயின் பலேரிக் தீவில் நேற்று நள்ளிரவு உணவக கட்டிடம் இடிந்து விழுந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் பலேரிக் தீவு பகுதியில் பால்மா டி மல்லோர்கா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள 2 மாடி ஹோட்டல் கட்டிடம் நேற்று இரவு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது. விபத்து குறித்து செய்தி அறிந்த உடன், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கட்டிட இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இந்த கட்டிட […]
சென்னை: மெக்சிகோவில் குடிமக்கள் இயக்கம் கட்சியின் தேர்தல் பிரச்சார மேடை சரிந்து விழுந்த விபத்தில் இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். 50 பேர் காயமடைந்துள்ளனர். மெக்சிகோவில் வரும் ஜூன் 2ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடிமக்கள் இயக்கம் கட்சி சார்பாக ஜனாதிபதி வேட்பாளராக ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் போட்டியிடுகிறார். நேற்று மெக்சிகோவின் வடக்கு மாகாணமான நியூவோ லியோனில் உள்ள சான் பெட்ரோ கார்சா கார்சியா நகரில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸிற்கான பிரச்சார மேடை […]
சென்னை : 80 கிலோ எடையை தூக்கிய பளு வீரர் உயிரிழந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ரஷ்யாவில் பளு தூக்கும் வீரர் ஒருவர் பளு தூக்கிய சிறிது நேரத்திலேயே சரிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும், ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவில் 80 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஒருவர் 80 கிலோ எடையை கொண்ட அந்த பளுவை சற்று தூக்க முடியாமலே தூக்கி […]
சென்னை: இந்திய பெருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த சிங்கப்பூர் விமானம் திடீரென 1.8 கிமீ தூரத்திற்கு கிழே பறந்தது. கடந்த மே 20ஆம் தேதி லண்டன் ஹீத்ரோவில் இருந்து சிங்கப்பூருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ32 போயிங் 777 300ER புறப்பட்டது. அப்போது (மே 21) இந்திய பெருங்கடல் பகுதியில் ஜரவாதி படுகையில் 37,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கையில் திடீரென 3 நிமிடத்தில் 1800மீட்டர் (1.8 கி.மீ) தூரம் கீழே சரிந்துள்ளது. இந்த திடீர் சரிவில், […]
சென்னை: ஸ்ரேல்-ஹமாஸ் போருக்கு மத்தியில் அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள், பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் ஓயவில்லை. ஹமாஸ் மீது தாக்குதல் நடத்துவதாகக் கூறி காசாவில் உள்ள பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், அயர்லாந்து, நார்வே மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீனத்தை தனி நாடு அங்கீகாரம் செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அயர்லாந்து, நார்வே நாடுகளுக்கான தனது […]
சென்னை: வங்கதேச எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மேற்கு வங்கத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கடந்த மே 12ஆம் தேதி வங்கதேசத்தை சேர்ந்த அவாமி லீக் கட்சியை சேர்ந்த அந்நாட்டு எம்.பி அன்வருல் ஆசிம் அனார் மருத்துவ காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் தனது நண்பர் வீட்டில் தங்கி இருந்த அனார் கடந்த 13ஆம் தேதி டெல்லி செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின்னர் அவரை காணவில்லை என கூறப்படுகிறது. 14ஆம் தேதிஅன்வருல் ஆசிம் […]
சென்னை : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மரணத்தால் உலகம் முழுவதும் தங்கம் மற்றும் கச்சா எண்ணெயின் விலையானது அதிகரிக்க அபாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிகிறது. ஈரான் அதிபரான இப்ராஹிம் ரைசி கடந்த ஞாயிற்றுகிழமை அன்று ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். அதிபரின் மறைவுக்கு ஈரான் அரசு 5 நாட்கள் துக்கம் அனுசரித்து கொண்டு வருகிறது. மேலும், சில உலகநாடுகளும் இந்த துக்கத்தில் பங்காற்றி வருகின்றனர். அதை தொடர்ந்து ஈரானின் உச்ச தலைவர் கமேனி அதிகாரப்பூர்வமாக ஈரானின் […]
சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரலை பாதிக்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. 2020ஆம் ஆண்டு முதல் உலகபெருந்தொற்று நோயாக உருமாறி பல்வேறு பரிமாணங்களில் பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்த கொரோனா தொற்றை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சி சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தனர். இருந்தும் தற்போது கூட புதியவகை கொரோனா வைரஸான KP.2 எனும் தொற்று கண்டறியப்பட்டு சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் நிலை உருவாகியுள்ளது. இது […]
சென்னை: லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தார். இங்கிலாந்தின் லண்டன் ஹீத்ரோவில் இருந்து புறப்பட்டு சிங்கப்பூரை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் (SQ321) ஒன்று நடுவானில் அதிக மேகம் கொண்ட கூட்டத்தில் திடீரென மோதியதால் பயங்கரமாக குலுங்கியுள்ளது. இதன் காரணமாக, விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த விமானத்தில் மொத்தம் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்தனர். இந்நிலையில், மோசமான […]