குவைத் : நாட்டின் தெற்கு அஹ்மதி கவர்னரேட்டில் உள்ள மங்காப் பகுதியில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் சமையல் அறையில் நேற்று (ஜூன் 12) திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 தமிழர்கள் உள்பட 40 பேர் இந்தியர்கள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ […]
குவைத் : அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து, குவைத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் மத்திய அரசு தொலைபேசியில் பேசி வருகிறது. குவைத் நாட்டில் குடியிருப்புக் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் சிலர் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபருக்குச் சொந்தமான அடுக்குமாடிக் குடியிருப்பில் தமிழர்கள் உள்பட இந்தியாவைச் சேர்ந்த பலர் தங்கியுள்ளனர். இந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் இதுவரை 41 பேர் பலியானதாகவும், அதில் 2 […]
குவைத் : குவைத்தின் அகுமதி ஆளுநரகம் பகுதியில் உள்ள ஆறு மாடிக் கட்டிடத்தில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் 41 பேர் உடல் கருகி உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 40 பேர் காயமடைந்தனர் என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்தில் 2 தமிழர்கள், 5 மலையாளிகள் உட்பட 10 இந்தியர்கள் உயிரிழந்ததாக குவைத் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டடத்தில் வெளிநாடுகளில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் பெரும்பாலும் தங்கியிருந்ததாக சொல்லப்படுகிறது. சமையலறையில் ஏற்பட்ட தீ, கட்டிடத்தின் […]
பிடிஎஸ்: பிரபல பாடகர் குழுவான BTS குழுவின் மூத்த உறுப்பினரான ஜின் எனப்படும் கிம் சியோக்ஜின் 2 வருடங்களுக்கு பிறகு இராணுவத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். தென் கொரியா நாட்டின் பிரபலன பாடகர் குழு தான் பிடிஎஸ் (BTS) எனப்படும் பாடகர் குழு. 7 பேர் கொண்ட இந்த பாடகர் குழுவில் மூத்த உறுப்பினர் தான் ஜின். உலகெங்கிலும் இந்த பாடகர் குழுவிற்கு ரசிகர்கள் உள்ளனர், அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இந்த பாடகர் குழுவிற்கு தீவிர ரசிகர்களாக இருந்து […]
புதுடெல்லி : உக்ரைனுடனான மோதலின் போது, ரஷ்ய இராணுவத்தால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட மேலும் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இத்துடன் அங்கு இந்தியர்கள் உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக, ரஷ்யா – உக்ரைன் இடையே நடந்த மோதலில் இரண்டு இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான் என்ற 30 வயது நபர் மார்ச் மாதம் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த ஹெமில் அஷ்வின்பாய் மங்குகியா என்ற 23 வயது […]
கனடா: கனடாவில் உள்ள சர்ரே எனும் பகுதியில் இந்திய வம்சாவளி நபர் குடியிருப்பு அருகே நடந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் அவரது மொத்த குடும்பத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 2019 கனடாவுக்கு வந்தவர் தான் தான் 28 வயதான இந்தியரான யுவராஜ் கோயல். இவர் மிக சமீபத்தில் அவர் நிரந்தர வதிவிட உரிமம் பெற்றும் இருக்கிறார். இவர் கனடாவில் விற்பனை அதிகாரியாக (Sales Officer) பணிபுரிந்து வந்திருக்கிறார். கடந்த ஜூன்-7ம் தேதி பகல் சுமார் 8.45 […]
டென்மார்க் : டென்மார்க் பிரதமர் மேட் ப்ரெடெரிக்சன் மீது மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். டென்மார்க் நாட்டின் தலைநகரமான கோபன்ஹேகன் சதுக்கத்தில் வைத்து, நேற்றைய தினம் பிரதம மந்திரி மேட் ப்ரெடெரிக்சன் (Mette Frederiksen) மீது, தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏதும் இல்லாமல் தப்பிவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மேட் […]
ரஷ்யா: ரஷ்யாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் அருகே உள்ள ஆற்றில் 4 இந்திய மாணவர்கள் ஆற்றில் மூழ்கி உயிரிழந்ததாக அங்குள்ள அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளனர். அதில் ஒரு பெண்ணமணியை மட்டுமே மீட்டுள்ளதாகவும் மீதம் உள்ள மூவரையும் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், 18-20 வயதுடைய 4 மாணவர்கள் – 2 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகள் அருகிலுள்ள வெலிகி நோவ்கோரோட் நகரில் உள்ள நோவ்கோரோட் மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு […]
விண்வெளி ஆய்வு மையம் : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3வது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்குச் சென்றுள்ளார். ஏற்கனவே, 2006 மற்றும் 2012ம் ஆண்டு என இரண்டு முறை விண்வெளி சென்ற அவர், இதுவரை 322 நாட்களை விண்ணில் கழித்திருக்கிறார். 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின்போயிங் என்ற நிறுவனம் வடிவமைத்த ஸ்டார்லைனர் விண்கலம் மூலம், தற்போது விண்வெளி மயத்திற்கு சென்றுள்ளார். அவருடன், அமெரிக்கக் கடற்படை முன்னாள் கேப்டனுமான புட்ச் வில்மோரும் […]
கேட் மிடில்டன்: கடந்த மார்ச் மாதம், இங்கிலாந்து இளவரசியான கேட் மிடில்டன் ஒரு காணொளியின் மூலம் தனக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார். மேலும், அவர் அதற்கான சிகிச்சையும் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், கேட் மிடில்டன் இந்த வருடம் நடைபெறும் எந்த ஒரு பொது நிகழ்விளும் கலந்து கொள்ள மாட்டார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்து உள்ளது. அதன்படி, இளவரசியின் பங்கேற்பு இல்லாத நிலையில் அரச பணிகள் தொடர்பான பல அறிக்கைகளும் வெளியாகி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. […]
மக்களவை தேர்தல் : 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில், இந்திய தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 240 இடங்களை வென்றதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், பாஜக தலைமையிலான NDA கூட்டணி, தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடிக்கு சீனா வாழ்த்து தெரிவித்துள்ளது. ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக, இந்தியாவுடன் இணைந்து பயணிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ள சீன வெளியுறவுத்துறை, “இரு நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டும், எதிர்காலத்தை மனதில் வைத்தும், […]
லெபனான் : தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் உயிரிழ்ந்தனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். தெற்கு லெபனானில் உள்ள நகோராவை இணைக்கும் சாலையில் மோட்டார் சைக்கிள் மீது, இஸ்ரேலிய ஆளில்லா விமானம் மூன்று வான்வெளி ஏவுகணைகளை ஏவியதாக லெபனான் இராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர். கடந்த நான்கு நாட்களாக இஸ்ரேலிய விமானப்படை ஒரு நாளைக்கு 15 தாக்குதல்களுக்கு மேல் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருவதாக குற்படுகிறது.
ஓஹியோ: அமெரிக்கவில் இருக்கும் ஒரு பகுதியான ஓஹியோ மாகாணத்தில் இருக்கும் க்ளீவ்லேண்ட் நகரத்திலிருந்து 15 மைல் தொலைவில் உள்ள ஒரு கடையின் கார் பார்க்கிங்கில் பிற்பகல் 3 மணி அளவில் சோகத்தை ஏற்படுத்தும் கொடூர சம்பவமானது அரங்கேறி உள்ளது. கடந்த திங்கள்கிழமை அன்று ஒரு தாயும், மகனும் ஓஹியோவில் உள்ள ஜெயண்ட் ஈகிள் எனும் கடையில் ஷாப்பிங் செய்து விட்டு காரில் வீடு திரும்பவதற்கு கார் பார்க்கிங் சென்றுள்ளனர். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு மர்ம பெண் பின்னாடி […]
ஜோர்ஜியா மெலோனி: இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. (NDA) 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை X தளத்தில் வாழ்த்தியுள்ளார் . பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை வென்றுள்ளது . அதே நேரத்தில், இந்தியா கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டு பிரதமரான மெலோனி பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, “உங்களின் சிறப்பான பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள். […]
இலங்கை : நாட்டின் பல பகுதிகளில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 87,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கையின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரேமிதா பண்டார தென்னகோன் தகவல் தெரிவித்துள்ளார். இந்த கனமழை வெள்ளத்தால் தென் மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கனமழையால் வீடுகள், வயல்வெளிகள் மற்றும் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அதன்படி, மாத்தறையில் 4 பேர், இரத்தினபுரியில் 5 பேர் மற்றும் கொழும்பில் 3 பேர் உட்பட மொத்தம் 12 உயிரிழப்புகளும், 5 பேர் […]
பிரான்ஸ் : கடந்த சனிக்கிழமை அன்று காலை 9 மணி அளவில் 3 மர்ம நபர்கள் பிரெஞ்சுக் கொடி சுற்றப்பட்ட 5 சவப்பெட்டிகளை ஈபிள் டவர் அடியில் வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்கள். அந்த பெட்டிகளுக்குள் ஜிப்ஸம் என்னும் ரசாயனம் இருந்துள்ளதாக காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். மேலும், அந்த சவப்பெட்டிகளை வேனில் ஏற்றி கொண்டுவந்த பல்கேரிய நாட்டை சேர்ந்த ஒருவர் உட்பட, பெர்லினுக்கு ரயிலில் தப்பிச செல்ல முயன்ற வேறு 2 பேரையும் போலீசார் அதிரடியாக கைது […]
கனடா : கனடா நாட்டில், புலம்பெயர்தல் கொள்கைகளில் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிரின்ஸ் எட்வர்ட் தீவில் உள்ள இந்திய மாணவர்கள் கடந்த மே-24ம் தேதி முதல் உண்ணாவிரதம் வந்துள்ளனர். மாணவர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலனை செய்யும் எனக்கூறி உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கனடா நாட்டின் புலம்பெயர்தல் அலுவலக இயக்குநரான ‘ஜெஃப் யங்’ மாணவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். அதன் படி மாணவர்களும் உண்ணாவிரதத்தை இடைநிறுத்தம் செய்துள்ளனர். இதற்கிடையில், உண்ணாவிரதம் இருந்த சில மாணவர்கள் நிலைமை மோசமாகி மயங்கி […]
பாகிஸ்தான் : ஹைதராபாத்தில் உள்ள ப்ரீதாபாத் பகுதியில் உள்ள திரவ பெட்ரோலிய எரிவாயு நிரப்பும் கடையில் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக ARY நியூஸ் தகவல் தெரிவித்துள்ளது. நீருன்கோட்டின் UC-8-ல் உள்ள மீர் நபி பக்ஸ் டவுன் சாலையில் உள்ள சச்சா பச்சா மருத்துவமனையின் தரை தளத்தில் அமைந்துள்ள எல்பிஜி சிலிண்டர் நிரப்பும் கடையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது, அருகில் உள்ள பல வீடுகளில் […]
போர்ச்சுகல் : கடந்த ஞாற்றுக்கிழமை அன்று தெற்கு போர்ச்சுகலில் உள்ள பெஜா விமான நிலையத்தில் மாலை 4:05 மணிக்கு நடைபெற்ற ஒரு விமான சாகச நிகழ்ச்சியின் போது 2 சிறிய விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கிறது. இந்த விபத்துக்குள்ளான 2 விமானங்களின் ஒரு விமானி உயிரிழந்துள்ளார் எனவும் மற்றும் ஒரு விமானி காயமடைந்துள்ளார் எனவும் விமானப்படை தெரிவித்துள்ளது. ஆறு விமானங்களை உள்ளடைக்கிய வான்வழி சாகசத்தின் போது 2 விமானங்கள் ஒன்றை ஒன்று மோதிக்கொண்டு விபத்துக்களாகி […]
மெக்சிகோ : கிளாடியா ஷெயின்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக பெரும் வெற்றியை பெற்றுள்ளார். இவர் தனது வழிகாட்டியும் தற்பொழுது அதிபராக இருக்கும் ஆண்ட்ரஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடோரின் திட்டங்களை தொடரவுள்ளார். கிளாடியா ஷெயின்பாம், ஒரு காலநிலை விஞ்ஞானி மற்றும் மெக்சிகோ நகரத்தின் முன்னாள் மேயரும் ஆவார். இவர், 58.3% முதல் 60.7% வரை வாக்குகளைப் பெற்று அதிபராக வெற்றி பெற்றுள்ளார். இது மெக்சிகோவின் ஜனநாயக வரலாற்றில் உயர்ந்த வாக்கு சதவிகிதமாகும். அதிபர் அணியினரின் கூட்டணி இரு அவைகளிலும் […]