ஜோர்ஜியா மெலோனி:இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, பாஜக தலைமையிலான என்.டி.ஏ. (NDA) 2024-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடியை X தளத்தில் வாழ்த்தியுள்ளார் .
பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி 292 இடங்களை வென்றுள்ளது . அதே நேரத்தில், இந்தியா கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளது. இந்நிலையில், இத்தாலி நாட்டு பிரதமரான மெலோனி பிரதமர் மோடியுடன் எடுத்துக் கொண்ட படத்தை பகிர்ந்து, “உங்களின் சிறப்பான பணிக்கு எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்.
இத்தாலி மற்றும் இந்தியாவை ஒன்றிணைக்கும் நட்பை வலுப்படுத்துவதற்கும், நம்மை இணைக்கும் பல்வேறு விவகாரங்களில் ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்கும், நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம் என்பதில் உறுதியாக உள்ளேன்”, என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
unknown node