என்ன சொல்ல போகிறாய் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் அஸ்வினின் முதல் பேச்சு நெட்டிசன்கள் மத்தியில் சர்ச்சையானதால், விநோயோகிஸ்தர்கள் கலக்கமடைந்துள்ளனராம்.
கடந்த இரண்டு நாட்களாக இணையத்தின் பேசு பொருள் நம்ம குக் வித் கோமாளி அஸ்வின் தான். அந்தளவுக்கு வைச்சு செய்து கொண்டிருக்கின்றனர். இதெற்கெல்லாம் காரணம் அவர் நடித்துள்ள முதல் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் அறியாமல் பேசிய கன்னி (முதல்) பேச்சுதான்.
அஸ்வின் நடிப்பில் முதன் முதலாக தயாராகி வரும் திரைப்படம் என்ன சொல்ல போகிறாய். இந்த திரைப்படத்தை ஹரிஹரன் எனும் புதுமுக இயக்குனர் இயக்கியுள்ளார். ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பாக ரவீந்திரன் தயாரித்து வருகிறார்.
இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய அஸ்வின், ‘ எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. கதை பிடிக்கலைன்னா தூங்கிடுவேன். நான் 40 கதை கேட்டு தூங்கிவிட்டேன். என்னை முழிக்க வைத்த ஒரே கதை இது தான். ‘என அவர் பேசியது பெரும் சர்ச்சையானது. இணைய வாசிகளுக்கு பெரும் தீனியாக அமைந்துவிட்டது. அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து, எனக்கு இதற்கு முன்னர் மேடை பேச்சு பேசியதில்லை என்பதால், பேசிவிட்டேன் என்பது போல கூறிவிட்டார். இருந்தும் நெட்டிசன்கள் விடுவதாயில்லை.
இந்த விஷயத்தை பார்த்த தியேட்டர் அதிபர்கள், விநோயோகிஸ்தர்கள் அதிர்ந்து போய்விட்டனர். அவர்கள் குக் வித் கோமாளி அஸ்வின் நடிக்கும் முதல் படம் என்பதால், இளைஞர்கள் மத்தியில் வரவேற்ப்பு இருக்கும் என நம்பி முக்கூட்டியே நல்ல விலை பேசி அட்வான்ஸ் வரை கொடுத்துவிட்டனராம்.
ஆனால், தற்போது அஸ்வினை வைச்சி செய்வதே அதே இளைஞர் கூட்டம் என்பதால், தியேட்டருக்கு கூட்டம் வருமா என அதிர்ந்து, தயாரிப்பு தரப்பிடம் படத்தை விலையை குறைக்க சொல்லி வற்புறுத்தி வருகிறார்களாம்.
என்ன சொல்ல போகிறாய் அஸ்வினுக்கு கோலிவுட் ரசிகர்கள் என்ன செய்ய காத்திருக்கிறார்களோ? இனி வரும் காலங்களிலாவது பாத்து சூதானமாக நடந்துக்கோங்க அஸ்வின் என இணையத்தில் பலரும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…