Shankar [File Image]
இந்தியன் 2: இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல் ஹாசன் உட்பட பலர் நடித்துள்ள “இந்தியன் 2” ரிலீஸுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், படத்தின் ப்ரோமொஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஷங்கரின் சினிமாப் பயணம் மற்றும் அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கூடுதல் தகவல்களை இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கூறிஉள்ளார். ஆம், ஷங்கர் தனது அடுத்தடுத்த 3 படங்களின் விவரத்தை தெரிவித்துள்ளார்.
ஆதாவது, ஒரு வரலாற்று சிறப்பு மிக்க படமும், அடுத்து ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எடுக்க உள்ளதாகவும், அறிவியல் அம்சங்களை சார்ந்த (SciFi) கதைக்களத்துடன் ஒரு படம் என அந்த படத்தை 2012 என்ற பெயரில் உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார்.
குறிப்பாக, இந்த 3 திரைப்படங்களுக்கும் மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்க இருப்பதாகவும், VFX காட்சிகள் இடம் பெற்றிருக்கும் என்றும், புதுப்புது தொழில் நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும், கேம் சேஞ்சர் படப்பிடிப்பு 15-20 நாட்கள் மட்டுமே நிலுவையில் உள்ளது, இந்தியன்2 வெளியான பிறகு அதை முடிப்பேன் என்று கூறியுள்ளார்.
இந்தியன் 2 ஜூலை 12 ஆம் தேதி திரையரங்குகளில் வர உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படத்தில் கமலை தவிர, காஜல் அகர்வால், எஸ்.ஜே. சூர்யா, சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், மனோபாலா, காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள்.
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…
சென்னை : நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த…
சென்னை : 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர்…
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…