தனது வீட்டு வாசலில் சமந்தாவிற்கு கோயில் கட்டிய தீவிர ரசிகர்.!

Samantha Temple Built

தமிழ் சினிமாவிழும் சரி, தெலுங்கு சினிமாவிலும் சரி, நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தீவிர ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த நடிகர்களுக்கு கோவில் கட்டி தலைப்பு செய்திகளில் இடம் பிடிப்பது வழக்கம்.

அந்த நடிகைகளின் வரிசையில் குஷ்பு, நமீதா, ஹன்சிகா மோத்வானி, நயன்தாரா ஆகியோரின் பெயரில் உள்ள கோவில்கள் தமிழகத்தில் அவர்களது ரசிகர்களால் கட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சமந்தாவுக்கு இப்போது கோவில் கட்டப்பட்டுள்ளது.

Samantha Temple Built
Samantha Temple [Image Source : News18]
அட ஆமாங்க…. ஆந்திரப் பிரதேசம் மாநிலம்பாபட்லா அருகே உள்ள ஆலபாடு கிராமத்தில் வசித்து வரும், தெனாலி சந்தீப என்ற நபர் நடிகை சமந்தாவின் தீவிர ரசிகர் ஆவார். அவரது அளவில்லா பாசத்திற்காக தனது வீட்டின் வாசல் முன்பு, சமந்தாவுக்கு ஒரு ‘கோவில்’ கட்டியுள்ளார்.

Samantha Temple [
Samantha Temple [Image Source : hittvtelugu]
அதில் சேலை அணிந்த சமந்தாவின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அந்த ரசிகர் தனது பிறந்தநாளில் சிலையை திறந்து வைக்க திட்டமிட்டுள்ளாராம். மேலும், அந்த ரசிகர் தனது நிஜ வாழ்க்கையில் சமந்தாவை ஒரு முறை கூட நேரில் சந்தித்ததே இல்லையாம். இதனால் ஒரு முறையாவது சமந்தாவை சந்திப்பது அவரது கனவாக இருக்கிறது.

Samantha Temple
Samantha Temple [Image Source : Filmibeat]
மேலும், சமந்தா குறித்து அந்த ரசிகர் பேசுகையில், அவரை திரையில் பார்த்து மட்டும் அவருக்கு நான் ரசிகர் ஆகவில்லை. பிரத்யுஷா அறக்கட்டளைக்கு சமந்தா செய்த தொண்டுப் பணிகளைப் பார்த்த பிறகு தான் அவரது பெரிய ரசிகரானேன் என்று அவர் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்