முக்கியச் செய்திகள்

பட வாய்ப்பு குறைந்ததும் அந்த விஷயத்தில் குதித்த நடிகை கீதா! வெளியான பகீர் தகவல்!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில், அம்மா கதாபாத்திரம் அக்கா, தங்கை கதாபாத்திரம் என இதைபோல் முக்கியமான குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை கீதா. இவர் நடித்த குருதிப்புனல், சிவகாசி, சந்தோஷ் சுப்ரமணியன், ஆகிய படங்கள் இன்றுவரை ரசிகர்ளுடைய பேவரைட் திரைப்படமாக இருக்கிறது என்றே கூறலாம்.

இந்த நிலையில், ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த நடிகை கீதா அப்படியே ஆன்மீகத்தில் இறங்கிவிட்டதாக நடிகரும் சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நடிகை கீதா பாலசந்தர் மூலம் அறிமுகமானவர்.  அவர் ஒரு அருமையான நடிகை. அதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால், நடிகை கீதாவின் தோற்றம் ஒரு முதிர்கனியாக இருக்கும். ஒரே ஒரு படத்தில் நடிகர் ரஹ்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். அதன் பிறகு பல படங்களில் அம்மா, தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பட வாய்ப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கிய உடன் நடிகை கீதா ஆன்மிகத்தில் ஈடுபட்டுவிட்டார்.

தமிழ்நாட்டில் எந்த இடத்தில் புராண கோவில் இருக்குதோ அந்த கோவிலுக்கு சென்று தங்கி ஒரு 3 நாட்களாகவாது தங்கி ஆன்மிகவாதியாக மாறி கீதா வாழ்ந்துகொண்டு இருக்கிறார். நான் சமீபத்தில் கீதாவை காஞ்சிபுரத்தில் பார்த்தேன். அவரை பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரு பெண் சாமியாரை பார்ப்பது போல இருந்தது. அப்படி மாறி ஒரு பெண் சாமியாராகவே கீதா வாழ்ந்து கொண்டு இருக்கிறார்” என பயில்வான் ரங்கநாதன்  கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருந்த கீதா இப்போது பெரிதாக படங்களில் பார்க்க முடியவில்லை. நன்றாக நடிக்க தெரிந்த இதைப்போன்ற நடிகைக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையே என பலரும் சோகத்துடன் கூறிவருகிறார்கள். மேலும் நடிகை கீதா கடைசியாக தமிழில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான மத்தாப்பூ  திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

41 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago