இந்த புகைப்படத்தில் இருக்கும் இந்த குட்டி பெண் யார் தெரியுமா?

சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களுடைய சிறிய வயது புகைப்படங்கள் சமீபகாலமாக வெளியாகி வைரலாகி கொண்டு இருக்கிறது. அந்த வகையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தனது அம்மாவுடன் சிறிய வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கிறார்.
சிறிய வயதில் பட்டு சட்டை அணிந்துகொண்டு கியூட்டாக சிரிக்கும் அவருடைய அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைரலாகி வரும் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆ இது? எனவும் சிறிய வயதிலே கீர்த்தி ரொம்ப கியூட் எனவும் கூறி வருகிறார்கள்.

நடிகை கீர்த்தி சுரேஷ் ஒரு காலத்தில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து கொண்டு கலக்கி வந்தார். ஆனால், சமீபகாலமாக அவர் உடல் எடையை குறைத்த காரணத்தால் அவருக்கு பட வாய்ப்புகள் ஆரம்ப காலத்தை போல கிடைக்கவில்லை கடைசியாக நடிகை கீர்த்தி சுரேஷ் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளியான மாமன்னன் படத்தில் நடித்திருந்தார்.
தெறிக்கும் சண்டைக்காட்சிகள்! “ஃபைட் கிளப்” படத்தின் திரைவிமர்சனம்!
மாமன்னன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆன நிலையில், அடுத்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் சைரன், ரகு தாத்தா, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனை தவிர நடிகை ராதிகா ஆப்தேவுடன் இணைந்து அக்கா என்ற வெப் தொடர் ஒன்றிலும் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025