பாலிவுட் இயக்குனர் பால்கி ரஜினிகாந்திடம் கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் இளையராஜா இசையமைக்க அதிக வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்பதே உண்மை. வசூல் ரீதியில் வெற்றி பெற்றாலும். விமர்சக ரீதியில் அனைவரும் கொண்டாடும்படியான ரஜினி படமாக அமையவில்லை.
அதனால், அடுத்த படத்தை எப்படியும் பெரிய ஹிட் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் ரஜினி உறுதியாக இருக்கிறாராம். அதனால், தான் அவரது பிறந்தநாளுக்கு கூட எந்த படத்தை பற்றியும் அப்டேட் வரவில்லை.
இன்னும் கதை கேட்டுக்கொண்டிருக்கிறாராம். விரைவில் அதற்கான அறிவிப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த இந்த முறை பாலிவுட் இயக்குனர் பால்கியிடம் கதை கேட்டுள்ளாராம் ரஜினி. இது ஒரு குடும்ப கதையாம். பான் இந்தியா திரைப்படமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளாராம் பால்கி.
மேலும், பால்கி படத்தில் இளையராஜா தான் இசையமைக்க உள்ளாராம். இந்த கூட்டணி உறுதியானால், வீரா (1994) படத்திற்கு பிறகு மீண்டும் இசைஞானி இளையராஜா – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூட்டணி கிட்டத்தட்ட 27 வருடங்கள் கழித்து இணையும் என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…