ilayaraja and anirudh [file image]
சினிமா பிரபலங்கள் தங்களுடைய சிறிய வயதில் பெரிய பெரிய பிரபலங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமீப காலமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் இது அந்த பிரபலமா? ஆள் அடையாளமே தெரியவில்லையே என ஆச்சரியத்துடன் பார்த்தும் வருகிறோம்.
அப்படி தற்போது இசையமைப்பாளர் இளையராஜாவுடன் ஒரு குட்டி பையன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் அந்த குட்டி பையன் வேறு யாருமில்லை, தற்போது தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருக்கும் அனிருத் தான்.
அனிருத் ரஜினிகாந்தின் உறவினர் என்பதால் அவர் தன்னுடைய சிறிய வயதிலேயே இளையராஜாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. இந்நிலையில், அனிருத் சிறிய வயதில் இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துக்கொண்ட போது இளையராஜா அவரை கட்டி அணைத்துக் கொண்டு நாற்காலியில் இருந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
பிரபல நடிகைக்கு இப்படி ஒரு நிலைமையா? குட்டி பத்மினியோடு இருக்கும் அந்த நடிகை…
அந்த சமயம் எடுக்கப்பட்ட அந்த புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் இசையமைப்பாளர் அனிருத் மிகவும் சிறிய வயதில் ஆள் அடையாளமே தெரியாதபடி இருக்கிறார். எனவே இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் இது அனிருத்தா? என்பது போல ஆச்சரித்துடன் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
மேலும், அனிருத் இசையில் கடைசியாக வெளியான ஜவான், ஜெயிலர், லியோ ஆகிய படங்கள் பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிகளை தொடர்ந்து அவர் அடுத்ததாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். அந்த வகையில், இசையமைப்பாளர் அனிருத் தற்போது இந்தியன் 2, விடாமுயற்சி, தலைவர் 170, தலைவர் 171 ஆகிய படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தனது அறிமுகப் படமான பீனிக்ஸ் படத்தின் விளம்பர வீடியோக்களை நீக்குமாறு மிரட்டியதாக எழுந்த…
கலிபோர்னியா : அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நீதிமன்றம், ஆண்ட்ராய்டு ஃபோன் பயனர்களின் தகவல்களை அனுமதியின்றி திரட்டியதாக…
டெல்லி : மத்திய அரசு புதிய விதி ஒன்றை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை 1, 2025 முதல் புதிய பான்…
வாஷிங்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் புதிய மசோதாவுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க…
இங்கிலாந்து : இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் (ஜூலை 2, 2025)…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…