50வது படத்தில் நடிகர்கள் பட்டாளம்.! பக்கா பிளான் போட்ட தனுஷ்…

நடிகர் தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் நடித்து வருகிறார். இதற்கிடையில், தனுஷின் 50-வது திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

அட ஆமாங்க… சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்க உள்ள 50வது படத்தில், பல முக்கிய நடிகர்கள் நடிக்க கமிட் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது வரை, எஸ்ஜே சூர்யா, சுந்தீப் கிஷன், விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் உள்ளிட்டோர் நடிப்பது உறுதி செய்யப்படுள்ளதாம்.

மேலும், படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க உள்ளார். ஒரு பெரிய கூட்டமே படத்தில் நடிக்க உள்ளதால். படத்தின் பட்ஜெட் பெரிய லெவலில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் படத்தின் மற்ற விவரங்கள் வரும் என படக்குழு தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று விண்ணில் பாய்கிறது `நிசார்’ செயற்கைக்கோள்!
July 30, 2025
தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!
July 30, 2025