இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள “பீஸ்ட்” திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
ரசிகர்கள் படம் வெளியாவதை கொண்டாடும் விதமாக பேனர்கள் வைத்து திரையரங்குகளின் முன்னாள் நின்று கொண்டு இசை முழங்க பட்டாசுகள் வெடித்து பால் அபிஷேகம் செய்து மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள். ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் படத்தை பார்க்க காத்திருந்த நிலையில், இன்று அதிகாலை பீஸ்ட் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்து வருகிறது.
படத்தை பார்த்த அணைத்து ரசிகர்களும் தங்களது கருத்துக்களை கூறிவருகிறார்கள். பலர் பாசிட்டிவ் கருத்துக்களையும் பலர் நெகட்டிவ் கருத்துக்களையும் கூறிவருகிறார்கள்.
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள ஒரு பாத்திரக்கடையில் பீஸ்ட் விஜய் சிலை ஒன்று 4 லட்சம் செலவில் வைக்கப்பட்டுள்ளது. தனியார் எலக்ட்ரிக் நிறுவனம் இந்த சிலையை வைத்துள்ளது.
இந்த சிலை வைத்து குறித்து பேசிய நிறுவனத்தின் உரிமையாளர் பாலாசிங் “விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வெற்றிபெறவும் வாடிக்கையாளர்களை கவரவும் இந்த சிலை வைத்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…
டெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போர் என்பது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி இது எங்கு வரைபோக…