இன்றுடன் பீஸ்ட் ஹீரோயின் பூஜா ஹெக்டே படக்காட்சிகள் பட ஷூட்டிங் நிறைவு பெறுகின்றன. அதனால், அவர் பேசிய வீடியோ ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் தற்போது பீஸ்ட் பட ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறார். கோலமாவு கோகிலா, டாக்டர் என சிரிப்பலையில் ரசிகர்களை கிறங்கடித்த நெல்சன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இதுவும், அதே போல, ஆக்சன், டார்க் காமெடி திரைப்படமாக உருவாகி வருவதாக கூறப்படுகிறது. சன் பிக்ச்சர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்து வருகிறார். இன்றுடன் அவரது காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட உள்ளன. இன்றுதான் அவரின் கடைசி பீஸ்ட் ஷூட்டிங் நாள் என்பதால், அவர் பேசிய வீடியோ ஒன்றை சன் பிக்ச்சர்ஸ் வெளியிட்டுள்ளது.
அதில் பேசிய பூஜா, ‘பீஸ்ட் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படப்பிடிப்பு மிகவும் கலகலப்பாக இருக்கும். படம் பார்க்கும் போது நீங்களும் நன்றாக சிரித்து மகிழ்வீர்கள். நெல்சன், விஜய் இருவரும் இணைந்து நல்ல பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க இருக்கிறார்கள். பணியாற்றிய அனைவரும் நல்ல மனிதர்கள். இந்த ஷூட்டிங் நாட்கள். விடுமுறை நாட்கள் போல எனக்கு இருந்தது. எனது பகுதியின் ஷூட்டிங் மட்டும் நிறைவு பெற்றுவிட்டது. எனக்கு வருத்தமாக இருக்கிறது.’ என கூறியுள்ளார்.
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…