“எங்க உறவை தவறா பேசாதீங்க.., உண்மை தெரியாம எதும் சொல்லாதீங்க” – கவினின் காதலி பரபரப்பு விடியோ.!

கவினை காதலித்தது உண்மை என நெல்லை ஆணவப்படுகொலை வழக்கில் தொடர்புடைய சுர்ஜித்தின் தங்கை சுபாஷினி வீடியோ வெளியிட்டுள்ளார்.

Nellai Case

நெல்லை : நெல்லையில் கவின் என்ற ஐ.டி. ஊழியர், தான் காதலித்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கவினும் அவரது காதலியும் தூத்துக்குடியில் பள்ளி பருவத்தில் இருந்தே ஒன்றாகப் பழகி வந்ததாகவும், ஆனால் கவின் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சுர்ஜித்துக்கு இந்த உறவு பிடிக்கவில்லை என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், கவினின் ஆணவக்கொலை வழக்கில், தந்தை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாயையும் கைது செய்ய போராட்டம் நடந்து வரும் நிலையில் கவினின் காதலி எனக் கூறப்படும் சுபாஷினி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘தங்களது உறவு குறித்து யாரும் அவதூறாகப் பேச வேண்டாம்” என கவினின் காதலி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், கவின் கொலைக்கும் தனது பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார். இந்த வீடியோ கவின் படுகொலை வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாரும் அவர் அவர்களுக்கு தோன்றுவதை பேசிவிட்டீர்கள். ஆனால் எனக்கும் கவினுக்கும் என்ன நடந்ததென, எங்களுக்கு மட்டும்தான் தெரியும். எங்கள் உறவு பற்றி யாரும் தவறாக பேச வேண்டாம். யாருக்கும் எதுவும் தெரியாது. உண்மை தெரியாமல் யாரும் எதையும் பேச வேண்டாம்.

என் அப்பா, அம்மாவுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவங்களை தண்டிக்க நினைப்பது தவறு. அவங்கள விட்ருங்க. நானும் கவினும் உண்மையா காதலிச்சோம். செட்டில் ஆக நேரம் தேவைப்பட்டது என கவின் சொன்னதால், நான் என் வீட்டில் எங்கள் காதலை சொல்லவில்லை. அதற்குள் சுர்ஜித் கவினை அழைத்து, பெண் பார்க்க வரச்சொல்லி பேசியுள்ளான். கவினும் சுர்ஜித்தும் எங்கள் திருமணம் குறித்து பேசியதாகவே எனக்கு தெரியும்.

நான் சிகிச்சைக்காக வந்திருந்த கவினுடைய குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருந்தேன். அதற்குள் அப்படியொரு விஷயம் நடந்துவிட்டது. இது எதுவும் தெரியாமல் யாரும் வதந்தியை பரப்பாதீர்கள். தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள்” என்று அந்த வீடியோவில் கூறியிருக்கின்றார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்