யோகி பாபுவுக்கு தோனி கொடுத்த செம கிப்ட்…வைரலாகும் வீடியோ.!!

yogi babu and dhoni

சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் தோனிக்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் பற்றி சொல்லியே தெரிய வேண்டாம். கிரிக்கெட்டில் உள்ள பலரும் தோனியின் தீவிர ரசிகர் என்று கூறுவது உண்டு. அதைப்போல, சினிமா பிரபலங்கள் பலரும் தோனியின் தீவிர ரசிகர்கள் என்று கூட கூறலாம்.

MS Dhoni
CSK Captain MS Dhoni [Image source : PTI]

குறிப்பாக காமெடி நடிகர் யோகி பாபும் தோனியின் மிகவும் தீவிரமான ரசிகர். இதனை அவர் சில பெட்டிகளிலும் வெளிப்படையாக கூறியது உண்டு. இந்த நிலையில், நேற்று முன்தினம் ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டி நடைபெற்ற நிலையில், அதில் சென்னை அணியும், குஜராத் அணியும் மோதியது.

dhoni and yogi babu
dhoni and yogi babu [Image source: file image ]

இந்த போட்டியை கண்டுகளிக்க நடிகர் யோகி பாபு மைதானத்திற்கு நேரடியாக சென்றுள்ளதாக கூறப்படுகிறது. போட்டி முடிந்த பிறகு நடிகர் யோகி பாபு தோனியை சந்தித்து பேசியுள்ளராம். அப்போது தோனியும் யோகிபாபுவுக்கு செம கிப்ட் ஒன்றை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அந்த செம கிப்ட் தோனி பயன்படுத்தும் பேட் தான். தான் பயன்படுத்தும் பேட்டை கையெழுத்து போட்டுகொண்டு யோகிபாபுவுக்கு அவர் கொடுத்துள்ளார். இதற்கான விடியோவையும் யோகி பாபு தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட யோகி பாபு அடிக்கடி  கிரிக்கெட் விளையாடி அதற்கான வீடியோக்களை சமூக வலைதளபக்கங்களில் பதிவு செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்