#WTC23: இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்ட ஐசிசி!

Rohit Sharma

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெற உள்ள நிலையில், ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர்.

ஜூன் 7ம் தேதி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடைபெறுவதை ஒட்டி, இந்திய கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு சிறப்பு போஸ்டர் வெளியிட்டுள்ளது ஐசிசி. அந்த போஸ்டரில் “Red-ball Redemption” என்ற வாக்கியமும், WTC21 இறுதிப் போட்டியை விட இந்தமுறை இந்திய அணி சிறப்பாக செல்ல முடியுமா? எனவும் குறிப்பிட்டுள்ளது.

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஜூன் 7ம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது. ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இன்னொரு பக்கம் ஆஸ்திரேலிய அணி ஒரு மாதத்திற்கு மேலாக இங்கிலாந்திலேயே முகாமிட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை சென்ற இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. இந்த முறை, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்