மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை!

மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியில் இறங்கிய பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன்.
கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவர்கள், செவிலியர்கள் காவல்துறையினர் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் வெளியில் இறங்கி தங்களது பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை வித்யாபாலன், ஊரடங்கு அமலில் இருக்கும் சூழ்நிலையில் பல்வேறு சமூக பணிகளை மேற்கொண்டுவருகிறார். மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் 3,500 பேருக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் கருவிகளை வழங்கியிருக்கிறார்.
மேலும் இவர் மருத்துவர்களுக்காக நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டு வரும் நிலையில், இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘எங்கள் மருத்துவ ஊழியர்களுக்காக முழு உடல் பாதுகாப்பு கவசத்தை நன்கொடையாக அளித்து வருகிறேன். மேலும் இந்தியா முழுவதும் டாக்டர்களுக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் உடனடியாக தேவைப்படும் முழு கவச உடைகளுக்காக நன்கொடை திரட்ட முடிவு செய்து இருக்கிறேன்.’ என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025