சர்ச்சையான ‘பால் டப்பா’ விவகாரம்! மன்னிப்பு கேட்ட இயக்குனர்!
பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பால் டப்பா வருகை தர மறுத்ததாக வெளியான தகவல் சர்ச்சையாக வெடித்த நிலையில், இதற்கு விளக்கம் அளித்து இயக்குனர் எம்.ராஜேஷ் வீடியோ ஒன்றை ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டுள்ளார்.

சென்னை : தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் RAP பாடகர்களில் முக்கியமானவர் என்றால் ‘பால் டப்பா’ தான். இவர் சமீபத்தில், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில், உருவாகியுள்ள, பிரதர் படத்தில் இடம்பெற்று இருக்கும் “மக்காமிஷி” என்ற பாடலை எழுதி ப் பாடியுள்ளார். இந்த பாடல் தான் ரீல்ஸ்களில் தற்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
இந்த சுழலில், இவ்வளவு பெரிய இசையமைப்பாளர் இசையில் பாடல்கள் எழுத வாய்ப்பு கிடைப்பது எல்லாம் சாதாரண விஷயம் இல்லை என்பது பலருக்கும் தெரியும். இந்த வாய்ப்புகளைத் தொடர்ந்து பிரதர் படத்தின் இசைவெளியீட்டு விழாவிற்கும் பால் டப்பாவைப் படத்தின் இயக்குநர் எம்.ராஜேஷ் தனியாக அழைத்துள்ளார். இவ்வளவு பெரிய விழாவிற்கு அழைப்பு கொடுப்பது தெரிந்தும் பால் டப்பா வரவில்லை என முதலில் மறுத்துள்ளார்.
அதாவது, இயக்குநர் எம்.ராஜேஷ் இப்படி விழா நடக்கிறது நீங்கள் வரவேண்டும் எனக் கூற, அதற்குப் பால் டப்பா இல்லை நான் எதற்கு வரணும்? பாட்டு எழுதி கொடுத்தாச்சு பாடல் ஹிட் ஆகிவிட்டது என்பது போலக் கூறியுள்ளார். அதற்கு இயக்குநர் இல்லை மற்ற பாடல்கள் இருக்கிறது வாடா எனக் கூற, அதற்குப் பால் டப்பா அப்போ மற்றவர்களை அழைத்துக்கொள்ளுங்கள் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? எனக் கேட்டுள்ளார்.
பின், இயக்குநர் எம்.ராஜேஷ் இல்லை இசை வெளியீட்டு விழாவிற்கு வா அனைவர்க்கும் வாழ்த்து சொல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். இல்லை அனைவருடைய நம்பரையும் எனக்கு அனுப்பி வையுங்கள் நான் அவர்களுக்கு வேலையில்லாத நேரத்தில் பேசிக்கொள்கிறேன் எனக் கூறியதாகவும், பிறகு எப்படியோ இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து வாழ்த்து தெரிவித்துவிட்டு வேகமாகச் சென்றுவிட்டதாகவும் இயக்குநர் எம்.ராஜேஷ் சீரன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருந்தார்.
பால் டப்பா தன்னுடைய பாணியில் எதார்த்தமாக இப்படிக் கூறியது, அவர் மீது சர்ச்சைகள் எழுவதற்குக் காரணமாக அமைந்துவிட்டது. ஏனென்றால், சில பாடல்கள் எழுதிவிட்டு இவ்வளவு தலைக்கனமா? என்கிற கோணத்தில் பலரும் கேள்வி எழுப்பினார்கள். இதனைக் கவனித்த இயக்குநர் எம்.ராஜேஷ் இது குறித்து விளக்கம் அளித்து வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் “இன்றைய காலத்தில் பால் டப்பா வளர்ந்து வரும் நல்ல பாடகர் எனவே, அவருடைய பாடல் தான் வைரலாகி கொண்டு இருக்கிறது. எனவே, அவருக்கு நன்றியைத் தெரிவிக்கும் விதமாகத் தான் இசை வெளியீட்டு விழாவிற்கு அவரை அழைத்தேன்.
நான் அழைத்த அன்று அவரால் வர முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் இருந்தது. யூடியூபர்கள் கலந்து கொள்ளக்கூடிய ஒரு நிகழ்ச்சி அவருக்கு இருந்ததால், விரைவாக பிரதர் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்து கிளம்பிவிட்டார். எனவே, அவருக்கு வேறு நிகழ்ச்சி இருந்த காரணத்தால் தான் இந்த நிகழ்ச்சியில் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது தெரிய வந்தது.
அது தெரியாமல் தான் நான் மற்றொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவரை பற்றி அப்படிப் பேசிவிட்டேன். மற்றபடி, அவரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வருகை தர ஆவலுடன் இருந்தார். நிகழ்ச்சி இருந்த காரணத்தால் அவரால் கலந்துகொள்ள முடியாமல் போனது. பால் டப்பாவைத் தொடர்பு கொண்டு பேசினேன். சகஜமாகத் தான் அவரிடம் பேசினேன் நீங்கள் எதுவும் தப்பாக எடுத்துக்கொள்ளவேண்டாம் ” எனக் கேட்டுக்கொண்டதாகவும் எம்.ராஜேஷ் கூறியுள்ளார்.
பால் டப்பா சர்ச்சை: வீடியோ வெளியீட்டு எம்.ராஜேஷ் விளக்கம்!!#PaalDabba | #brother | #MRajesh pic.twitter.com/ojlTfgDbHA
— Dinasuvadu (@Dinasuvadu) October 1, 2024
லேட்டஸ்ட் செய்திகள்
பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!
May 3, 2025