தனுஷ் வேற லெவல்…’கண்டிப்பா ராயன் பாருங்க’! மகேஷ் பாபு கொடுத்த விமர்சனம்!

ராயன் : தனுஷ் நடித்து இயக்கியுள்ள அவருடைய 50-வது படமான ‘ராயன்’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூலை 26-ஆம் தேதி ரிலீஸ் ஆகி மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று விமர்சனத்தை பெற்று வருகிறது. இது தனுஷின் 50-வது திரைப்படம் என்ற காரணத்தால் படத்தினை பார்த்துவிட்டு சினிமா பிரபலங்கள் பலரும் கூட தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து வரும் மகேஷ் பாபு படத்தினை பார்த்துவிட்டு தனுஷ் மற்றும் படக்குழுவுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். படம் பார்த்துவிட்டு அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” ராயன் படத்தினை பார்த்தேன். தனுஷ் படத்தை அருமையாக இயக்கி நடித்துள்ளார்.
அதைப்போல, படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் நன்றாக நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர்.ராஹ்மான் இசை மிகவும் அருமையாக இருக்கிறது. கட்டாயம் பார்க்க வேண்டும்” எனவும் மகேஷ் பாபு கூறியுள்ளார். ராயன் படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி இருக்கும் நிலையில், மகேஷ் பாபு படம் பார்த்துவிட்டு இப்படி கூறியிருப்பது தெலுங்கிலும் எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி இருக்கிறது.
மேலும், 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த ராயன் படம் வெளியான 4 நாட்களில் உலகம் முழுவதும் 90 கோடி கிட்ட வசூல் செய்துள்ளது. படத்திற்கு இன்னும் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக இன்னுமே வசூல் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அஞ்சு கட்சி அமாவாசை செந்தில் பாலாஜி! பதிலடி கொடுத்து கண்டனம் தெரிவித்த ஜெயக்குமார்!
February 16, 2025
தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்! துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை!
February 16, 2025