தக் லைஃப் படத்திற்காக சிம்புவை விட அதிக சம்பளம் வாங்கிய த்ரிஷா?
தக் லைஃப் திரைப்படத்தில் நடித்ததற்காக சிம்பு ரூ.8 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஜூன் 5, 2025 அன்று வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. குறிப்பாக, கதை மெதுவாக செல்வதும் த்ரிஷா நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் அத்துடன் எழுந்திருக்கிறது.
படம் வெளியாகி முதல் இரண்டு நாட்களில் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் சேர்த்து 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதல் நாளில் 17 கோடி ரூபாய் வசூலித்த படம், இரண்டாம் நாளில் 50% குறைந்து 7 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்தது. கர்நாடகாவில் படம் தடை செய்யப்பட்டதும், எதிர்மறையான விமர்சனங்களும் வசூலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இப்படியான சூழலில் படத்தில் த்ரிஷா மற்றும் சிம்புவிற்கு வழங்கப்பட்ட சம்பள தொகை குறித்த விவரமும் கசிந்துள்ளது. இப்படத்திற்காக நடிகை த்ரிஷா, நடிகர் சிம்புவை விட அதிக சம்பளம் பெற்றதாகவும், இது அவரது திரை வாழ்க்கையில் மிக உயர்ந்த சம்பளமாகும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. த்ரிஷா இப்படத்தில் இந்திராணி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இதற்காக அவருக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது அவரது வழக்கமான சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிகம். மறுபுறம், சிம்பு அமரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக 8 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக ஒரு தகவல்கள் பரவி வருகிறது. படத்தில் சிம்பு முழுவதுமாக ஹீரோ கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை என்பதால் சம்பளம் குறைவாக வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் த்ரிஷாவை விட அவர் குறைவான சம்பளம் வாங்கி இருப்பது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.