சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் (வயது 52) தவறி விழுந்து மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக, அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, இயக்குநர் பா.ரஞ்சித் உட்பட நான்கு பேர் (ராஜ்கமல், வினோத், பிரபாகரன்) மீது கீழையூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே சினிமாவட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்த ஒரு விஷயம் என்னவென்றால் நடிகர் சிம்புவும் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்து ஒரு படம் செய்யப்போவதாக வந்த செய்தி தான். இருவரும் இணைந்து செய்ய கூடிய அந்த படம் வடசென்னை 2 எனவும் செய்திகள் பரவ தொடங்கிவிட்டது. இருப்பினும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஒரு பக்கம் ஆர்வத்துடன் காத்துகொண்டு இருந்தார்கள். அவர்களுக்கு உற்சாகம் அளிக்கும் விதமாக சமீபத்தில் தனியார் யூடியூப் […]
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக் லைஃப்’ திரைப்படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில், பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் கடந்த ஜூன் 5, 2025 அன்று வெளியாகி, ரசிகர்களை ஏமாற்றியது. 1987இல் வெளியான ‘நாயகன்’ படத்தின் வெற்றியை அடுத்து, இந்தக் கூட்டணியில் மற்றொரு காவியத்தை நமக்கு கொடுக்கும் கண்டிப்பாக படம் மறக்க முடியாத அளவுக்கு ஒரு தரமான படமாக இருக்கும் […]
சென்னை : தமிழ் திரையுலகில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான தக் லைஃப் படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படத்தில் கமல்ஹாசன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜூன் 5, 2025 அன்று வெளியான இப்படம், விமர்சன ரீதியாக சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. குறிப்பாக, கதை மெதுவாக செல்வதும் த்ரிஷா நடித்த கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. 300 கோடி […]
சென்னை : நாயகன் திரைப்படத்தை தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணி தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்துள்ளனர். கிட்டத்தட்ட 32 -வருடங்களுக்கு பிறகு இவர்களுடைய கூட்டணி இணைந்துள்ள காரணத்தால் இந்த படத்தின் மீது மிகபெரிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருந்தது. அத்துடன் படத்தில் சிம்புவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தால் எதிர்பார்ப்பு எங்கையோ சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். படத்தின் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க படத்தை கமல்ஹாசன் தீவிரமாக ப்ரோமோஷன் செய்தும் வந்தார். இன்னும் கொஞ்சம் ஒரு படி மேல் சென்று […]
சென்னை : இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடித்துள்ள ”தக் லைஃப்” திரைப்படம் ஜூன் 5ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. வெளியீட்டிற்கு முன்னதாக, தயாரிப்பாளர்கள் அதிரடி காட்சிகள் நிறைந்த அதன் பிரமாண்டமான டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். ஆம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘தக் லைஃப்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. டிரெய்லரை வைத்து பார்க்கையில், தனது அடுத்த வாரிசாக சிம்புவை அறிமுகப்படுத்துவது போல் முதலில் காட்சிகள் வருகிறது. பின்னர் அதுபகையாக உருவெடுப்பது அடுத்தடுத்த காட்சிகளின் […]
சென்னை : இந்திய கிரிக்கெட் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் நட்சத்திர பேட்ஸ்மேனாக உள்ளார் விராட் கோலி. தற்போது நடப்பு ஐபிஎல் சீசனில் பாதி நிறைவுற்ற நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலியுடனான ஒரு கலந்துரையாடல் வீடீயோவை பதிவிட்டுள்ளது. அதில், விராட் கோலியிடம் நீங்கள் அதிகமாக தற்போது விரும்பி கேட்கும் பாடல் எதுவென்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கோலி, தனது மொபைல் போனில் உள்ள மியூசிக் பிளேயரை காண்பித்தார். அதில் […]
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா என ரசிகர்கள் ஏங்கி கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்காகவே ஒரு குட் நியூஸ் கிடைத்துள்ளது. அது என்னவென்றால், சந்தானம் நடிகர் சிம்புவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதுவும் காமெடியான கதாபாத்திரத்தில் நடிக்க தான் சந்தானம் கமிட் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் சிம்பு அடுத்ததாக தன்னுடைய 49-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தினை […]
சென்னை : நடிகர் சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த திரைப்படங்களிலும் நடிக்கவில்லை இருந்தாலும் அவருக்கு இருக்கும் அந்த மாஸான ரசிகர்கள் பட்டாலும் குறையவே குறையாது என்று சொல்லலாம். இன்னும் அவருடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும் கூட அவருடைய படங்களுக்கு சிறப்பான ஓபனிங் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் சினிமாவில் இருக்கும் மற்ற நடிகர்கள் கூட இந்த மனுஷன் படம் நடிக்கவில்லை என்றால் கூட இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களே என ஆச்சரியத்துடன் பார்ப்பதுண்டு. […]
சென்னை : டிராகன் படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து மார்க்கெட் எங்கேயோ சென்று விட்டது என்று சொல்லலாம்.அந்த அளவுக்கு அந்த படம் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து இந்த ஆண்டு அதிக வசூல் செய்த படமாக மாறி உள்ளதாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்த சூழலில் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் அடுத்ததாக சிம்பு படத்தை இயக்க உள்ளதால் அந்த படத்தின் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் […]
சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அந்த மாதிரி தான் நடிகர் சிம்புவிற்கு பல படங்கள் இருந்தாலும் குறிப்பாக சொல்லும் படி விண்ணைத்தாண்டி வருவாயா மிகப் பெரிய ஹிட் கொடுத்தது. இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் வெளியான சமயத்தில் ஹிட் அடித்து ஒரு பக்கம் இருந்தாலும் கூட மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டும் ஆயிரம் […]
சென்னை : லவ் டுடே படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரதீ ரங்கநாதன் இயக்குனர் அஸ்வந்த் மாரி முத்து இயக்கத்தில் உருவாகியுள்ள டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 21-ஆம் தேதி (நாளை) மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே, படத்தின் டிரைலர் வெளியாகி இன்னும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது. காதலர் தினத்தை முன்னிட்டு படம் பிப்ரவரி 6-ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், அதே தேதியில் அஜித்தின் விடாமுயற்சி படம் அதே தேதியில் வெளியாகிறது என்பதால் […]
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது. முதல் அப்டேட்டாக பார்க்கிங் படத்தின் இயக்குநர் இயக்கத்தில் தன்னுடைய 49-வது படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அடுத்ததாக அவருடைய 50-வது படத்தினை தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும், படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் இசையமைக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவர் அடுத்ததாக இயக்குநர் அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கான பெயர் என்ன என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, […]
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் கதையை சிம்புவுக்கு முன்னதாகவே இயக்குநர் தேசிங் பெரியசாமி ரஜினியிடம் கூறியிருந்தார். படத்தின் கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைப்போல, தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் மிகவும் பிடித்திருந்தது. ஆனால், சிலர் காரணங்களால் ரஜினியால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதால் சிம்புவிடம் இந்த கதையை அவர் […]
சென்னை : மற்ற நடிகர்களின் படங்களின் அப்டேட் வெளியாவதைப் பார்த்து வெறுத்துப்போன சிம்பு ரசிகர்கள் எப்போது சிம்புவின் 48-வது படம் தொடங்கும் எனக் காத்திருந்தார்கள். இந்த படம் மிகப்பெரிய படம் என்பதால் இந்த படத்தைத் துவங்கக் காலதாமதம் ஆகும் எனவும் கூறப்பட்டது. இருப்பினும், அடுத்தப்படுத்தின் அப்டேட்டாவது கொடுங்கள் என்கிற எதிர்பார்ப்பில் சிம்பு ரசிகர்கள் இருந்த நிலையில் , அப்டேட் தானே வேணும்? இந்தாங்க பெரிய அப்டேட்டா தருகிறேன் என்கிற தோரணையில், சிம்பு சமீபத்தில் அடுத்த படத்தின் அப்டேட்டை […]
சென்னை : வல்லவன், மன்மதன் உள்ளிட்ட படங்களில் நடித்த சிம்பு இன்றயை காலத்தில் அதே போன்ற படங்களை எடுத்தால் எப்படி இருக்கும் என்று நினைத்துக்கூட பார்த்தால் நமது உடலில் புல்லரிப்பு ஏற்படுகிறது. அவர் அப்படியான படங்களில் நடிக்கவேண்டும் என்பது தான் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அப்படியான ஒரு படத்தில் தான் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிம்பு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் தம் +மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா […]
சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். தனுஷ் நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” […]
சென்னை : வாழை திரைப்படத்தின் பார்த்து வியந்த சிம்பு, சிவகார்த்திகேயன் என பல பிரபலங்கள் படத்திற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய சிறிய வயதில் தன்னுடைய சொந்த ஊரான நெல்லை பகுதியில் வாழைத்தார் ஏற்றி போகும் லாரி ஒன்றில் பயணித்தபோது அந்த லாரி விபத்தில் சிக்கிய உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து தான் இந்த ‘வாழை’ படத்தினை இயக்கியுள்ளார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 23-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு படத்திற்கான […]
STR -48 : நடிகர் சிம்பு தற்போது கமல்ஹாசன் நடித்து வரும் ‘தக் லைஃப்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் டப்பிங் பணிகளை முடித்த நிலையில், அவர் அடுத்ததாக STR -48 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. STR -48 படத்தினை தேசிங்கு பெரிய சாமி இயக்குவார் எனவும், படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார் எனவும் மட்டுமே அறிவிக்கப்பட்டு இருந்தது. படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியும் கூட படப்பிடிப்பு தொடங்கிய பாடு இல்லை. எனவே, […]
சிம்பு : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு படங்களில் நடிப்பது மட்டுமின்றி, பல உதவிகளை செய்வது வழக்கம். சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இருந்தால் அவர்களுக்கு பண உதவிகளை சிம்பு செய்து கொடுத்து வருகிறார். குறிப்பாக, மறைந்த நடிகர் தவசி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த போது கூட சிம்பு உதவி செய்தார். அதனை தொடர்ந்து, அடுத்ததாக பிரபல காமெடி நடிகரான வெங்கல் ராவ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு 2 லட்சம் […]