துணை முதல்வர் பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின்: வாழ்த்து தெரிவித்த திரைபிரபலங்கள்!

துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனுஷ், கார்த்தி, சிம்பு உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

udhayanidhi stalin Best wishes

சென்னை : தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்று கொண்டார். இதனையடுத்து, அவருக்கு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில், சினிமாவை சேர்ந்த பிரபலங்களில் யாரெல்லாம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

தனுஷ்

நடிகர் தனுஷ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டின் துணை முதல்வராக பதவியேற்ற சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ” அன்புள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் மாண்புமிகு துணை முதல்வராக புதிய பொறுப்பை ஏற்க வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

நடிகரும், மநீம கட்சி தலைவருமான கமல்ஹாசன் ” துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இன்று, நீங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், தமிழக மக்களுக்கும் உறுதிமொழி எடுத்துக்கொண்டீர்கள். அவர்கள் இருவருக்கும் நீங்கள் உண்மையாக சேவை செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.

நெல்சன் திலீப் குமார்

இயக்குனர் நெல்சன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் சாருக்கு என்னுடைய வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

ஐசரி கணேஷ்

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கூறியதாவது ” உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றார்.அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய இந்த பயணத்தில் நீங்கள் வெற்றிபெற எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

எஸ்ஜேசூர்யா

நடிகரும், இயக்குனருமான எஸ் ஜே சூர்யா கூறியதாவது “வாழ்த்துகள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார், சரியான நேரத்தில் சரியான விஷயம் நடந்துள்ளது” என தனது வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.

சிம்பு

நடிகர் சிம்பு கூறியதாவது ” துணை முதலமைச்சர் பதவியேற்றதற்கு வாழ்த்துகள் உதயஸ்டாலின் அண்ணா” என கூறியுள்ளார்.

சந்தானம்

நடிகர் சந்தானம் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். நேரில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ” அன்புள்ள முதலாளி உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த தலைமையிலும் நீங்கள் இன்னும் பெரிய வெற்றியையும் செழிப்பையும் பெறுவீர்கள்” என கூறியுள்ளார்.

சிபி சத்யராஜ்

சிபி சத்யராஜ் கூறியதாவது “தமிழ்நாட்டின் துணை முதல்வராக பொறுப்பேற்கும் நண்பர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு தமிழகத்தின் அடுத்த தன்னம்பிக்கையாக வளர்ச்சி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்” எனக்கூறியுள்ளார். 

மாரி செல்வராஜ்

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ” இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்” எனக்கூறியுள்ளார்.

இவர்களை போலவே, கெளதம் கார்த்திக், மஞ்சுமா மோகன்,  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இசையமைப்பாளர் சாம் சிஎஸ் என பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது நன்றியையும் தனித்தனியாக தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

RIP Ratan Tata
Train Accident
Optimus Gen-2
MSDhoni
Kavarepet Train Accident - Madurai MP Su Venkatesan
Indian Squad for NZ
Thoothukudi Perumal Temple