Viduthalai 2 movie [file image]
விடுதலை 2 : விடுதலை இரண்டாவது பாகத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்து இருப்பதால் படத்தின் ஆடியோ உரிமை 4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக்க மிகப்பெரிய ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறு விறுப்பாக தயாராகி கொண்டு இருக்கிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த இளையராஜா தான் இந்த இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட்டானது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம்.
முதல் பாகத்தை விட இந்த இரண்டாவது பாகத்தில் பாடல்கள் எல்லாம் அருமையாக வந்து இருக்கிறதாம். மொத்தமாக இந்த இரண்டாவது பாகத்தில் 4 பாடல்கள் இருக்கிறதாம். அந்த 4 பாடல்களும் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த பாடல்களை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து கொடுத்து இருக்கிறாராம்.
படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிய நிறுவனம் படத்தின் பாடல்களை எல்லாம் கேட்டுவிட்டு அசந்துபோய்விட்டதாம். பாடல்களை கேட்டவுடன் 4 கோடிக்கு படத்தின் ஆடியோ உரிமையை வாங்கிக்கொள்கிறோம் என்றும் கூறிவிட்டு 4 கோடி கொடுத்து விடுதலை 2-வின் ஆடியோ உரிமையை வாங்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விடுதலை முதல் பாகத்தின் ஆடியோ உரிமை 1 கோடிக்கு விற்கப்பட்ட நிலையில், விடுதலை 2 -வது பாகம் அதனை மிஞ்சியுள்ளது. இதன் மூலம் படத்தின் பாடல்கள் மீது இருக்கும் எதிர்பார்ப்பும் அதிகமாகி இருக்கிறது. மேலும், விடுதலை 2 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…
சென்னை : இன்று (மே 3) முதல் மே 5 வரையில் சென்னை காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று முடிந்தது. இதில், பங்கேற்க வந்த ஸ்டாலினை,…