நடிகர் சஞ்சய் தத் சமீபத்தில் வெளியான கேஜிஎப் 2-படத்தில் அதீரா என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றே கூறவேண்டும்.
பிரபல பாலிவுட் நடிகரான இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். நுரையீரல் புற்றுநோய் 4-ஆம் நிலையில் இருந்தது கண்டறியப்பட்டது. இதனால், சில மாதங்கள் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டு புற்றுநோயில் இருந்து மீண்டு வந்தார்.
இது குறித்து அவர் பேசியது ” எனக்கு கேன்சர் இருப்பதாக மருத்துவர்கள் என்னிடம் கூறியவுடன் நான் அதிலிருந்து மீண்டு விடுவேன் என அவர்களிடம் சொன்னேன். ஆனா இந்த செய்தி எனக்கு தெரிய வந்ததும் என் மனைவி மற்றும் குழந்தைகளை நினைத்து 3 மணி நேரம் அழுதேன். அவர்களுடைய வாழ்கை என்ன ஆகிவிடுமோ பயந்துவிட்டேன்.
ஆனால் அதையே நினைத்து கொண்டு அப்படியே இருக்கவில்லை. இதிலிருந்து மீண்டு விடவேண்டும் என்ற யோசனை மட்டும் என்னிடம் இருந்தது. என்ன நடந்தாலும் பாசிட்டிவாக யோசித்தேன். என்னுடைய குழந்தைக்கு பிறந்த நாள் பரிசாக குணமடைந்த என்னுடைய உடலை தான் பரிசாக அளித்தேன் நான் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விட்டேன்” என கூறியுள்ளார்.
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…
டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…