Lokesh Kanagaraj [File Image]
Lokesh Kanagaraj: ‘இனிமேல்’ ஆல்பம் பாடலின் பத்திரிகையாளர் சந்திப்பில் தனது குடும்பம் சம்பந்தமான கேள்விகளை கேட்காதீங்க என காட்டத்துடன் தெரிவித்து கொண்டார்.
மிகக் குறுகிய காலத்திலியே லோகேஷ் கனகராஜ் தமிழ் சினிமா மட்டுமின்றி, தென்னிந்திய சினிமாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக முதலிடம் பிடித்துள்ளார். தற்பொழுது, ரஜினியை வைத்து ‘தலைவர் 171’ படத்தை இயக்குவற்கு தயாராகி வருகிறார்.
சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் பாடல் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை ஸ்ருதிஹாசன் நடிப்பில் ‘இனிமேல்’ ஆல்பம் வெளியாகியுள்ளது. இதன் வெளியீட்டு விழாவில் பேசிய லோகேஷ் கனகராஜ், தனது குடும்பத்தை பேசியதற்கு கோவப்பட்டுவிட்டார். இனிமேல் பாடல் வெளியீட்டு விழாவில், ஸ்ருதிஹாசனுடன் ‘இனிமேல்’ பாடலில் நடித்தது குறித்து மனம் திறந்த லோகேஷ் கனகராஜ் பேசினார்.
அப்பொழுது, பத்திரிகையாளர் ஒருவர் ஒரு இயக்குனராக உங்க மனைவி உங்களை பாத்திருப்பாங்க, நடிகராக பார்க்கும் பொழுது என ரியாக்ட் பண்ணுவாங்கன்னு கேட்டார். இதற்கு பதிலளித்த லோகேஷ், “உடனே முகம் மாறி கோபத்துடன் பேசுவது போல், நான் பொதுவாகவே முதலில் இருந்தே பெர்சனல் கேள்விகளை தவிர்த்து வருகிறேன்.
என்னை நீங்க விமர்சனம் செய்வதாக இருக்கட்டும் பாராட்டுவதாக இருக்கட்டும் எனக்கும் உங்களுக்கும் இடையே இருக்கட்டும். என்னுடைய வீட்டுல என்ன நடக்குது, அதை பத்தி பேச வேண்டாம்னு ரொம்ப ஸ்ட்ராங்காக இருக்கிறேன் என கூறியதுடன் இந்த கேள்வி வேண்டாம்” என கூறினார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…