சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பொங்கல் ரிலீஸ் ஆக வரும் என நினைத்த போது, தற்போது பிப்ரவரி 4ஆம் தேதி இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தல அஜித் நடித்துள்ள வலிமை திரைப்படம் வரும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என படக்குழு சில மாதங்களுக்கு முன்பே அறிவித்துவிட்டது. இப்படத்தை எச்.வினோத் இயக்கியுள்ளார், யுவன் இசையமைத்து உள்ளார். போனிகபூர் இப்படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளார்.
இந்த படம் பொங்கல் என அறிவித்ததால், மற்ற சிறிய பட்ஜெட் திரைப்படங்கள் தங்கள் ரிலீசை டிசம்பர் அல்லது பிப்ரவரிக்கு தள்ளிவைத்தன. ஏனென்றால், அஜித்தின் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதனால், அப்படத்திற்கு பலத்த வரவேற்பு இருக்கும் என்பதும் ஒரு காரணம்.
ஆனால், கடைக்குட்டி சிங்கம் பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். காரணம், இப்படம் குடும்ப செண்டிமெண்ட் கலந்த ஆக்சன் படமாக உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், பொங்கல் தினத்திற்கு குடும்ப செண்டிமெண்ட் படம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பு என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது எதற்கும் துணிந்தவன் படக்குழு, இப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் பிப்ரவரி 4ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது பட தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ்.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…