நடிகர் ஜெயம் ரவியுடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்!

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களை பெற்று, பல சாதனைகளை படைத்துள்ளது.
இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக, இயக்குனர் அகமத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
மேலும் இப்படத்தில், ஈரானிய நடிகை எல்நாஸ் நொரொஷியும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025