பிரபல இயக்குனர் பாரதிராஜா வீட்டில் தனிப்படுத்தப்பட்டுள்ளார்!

சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இயக்குனர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். இவர் தேனி என்ஆர்டி நகரில் உள்ள தனது வீட்டிற்கு, சென்னையிலிருந்து நேற்று முன்தினம் வந்துள்ளார். இதனையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பாரதிராஜாவின் சளி, ரத்த மாதிரிகளை தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதாரத்துறையினர் சேகரித்து, தேனி அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா இல்லை என உறுதியானது. இருப்பினும், பாரதிராஜாவை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பெயரில், பாரதிராஜா அவரது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
மேலும், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் சார்பில், இயக்குநர் பாரதிராஜா வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025