ரயில் : வடக்கன் என்ற தலைப்புக்கு சென்சார் போர்டு ஒப்புதல் அளிக்காததால், தற்போது படத்திற்கு ரயில் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தை எம் மகன், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல , பாண்டிய நாடு போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய சக்தி பாஸ்கர் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில், குங்கும ராஜ், வைரமலா உள்ளிட்ட புதுமுகங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேஷ் வைத்யா, பர்வேஸ் மெஹ்ரு, ஷமீரா, கோட்ச்சடைசெந்தில், வைரம் பட்டி, பிந்து மற்றும் வந்தனா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.
வட இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளிக்கும் உள்ளூர் தமிழனுக்கும் இடையிலான மோதலைச் சுற்றி படத்தின் கதையானது அமைந்துள்ளது. இந்நிலையில், படத்தின் தலைப்புக்கு சென்சார் போர்டு எதிர்ப்பு தெரிவித்தது. ற்பொழுது, வடக்கன் என்ற தலைப்பை “ரயில்” என மாற்றியுள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்கவரி சினிமாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, “விரைவில் வெளியீடு காண இருக்கும் ‘வடக்கன்’ திரைப்படத்தின் பெயர், தணிக்கை அதிகாரிகள் தடை செய்ததால், தற்போது ‘ரயில்’ என்று மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என்றும், படத்தின் வெளியீட்டுத் தேதி அடுத்த அறிவிப்பில் வெளியாகும்என தயாரிப்பாளர்” கூறிஉள்ளார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…