நானியின் 30-வது படத்தின் தலைப்புடன் முதல் பார்வை வெளியீடு.!

Hi Nanna

நடிகர் நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கும் நானி 30 திரைப்படத்திற்கு ஹாய் நன்னா என்று பெயரிடப்பட்டுள்ளது.

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான நானியின் 30-வது படத்துக்கு ‘ஹாய் நான்னா’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இயக்குனர் சவுரவ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதில், மிருணாள் தாகூர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வரும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Hi Nanna
Hi Nanna [File Image]

முதல் பார்வை முன்னோட்டத்தை வைத்து பார்க்கையில், படத்தின் கதை ஒரு தந்தை மற்றும் அவரது ஆறு வயது மகளை மையமாகக் கொண்டது. படத்தின் காட்சிகள் கோவா மற்றும் மும்பையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்