நண்பர் மனோபாலா மறைவு வேதனை அளிக்கிறது…ரஜினிகாந்த் இரங்கல்.!

நடிகர் மனோபாலா மைறவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் செய்தி.
நடிகரும், இயக்குனருமான மனோபாலா உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரலில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக 15 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மனோபாலா, இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

இவருடைய திடீர் மறைவு திரைதுறையில் பெரும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ள நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

ரஜினி இரங்கல்:
அந்த வகையில், ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில், எனது அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரபல இயக்குநரும், நடிகருமான, அருமை நண்பர் மனோபாலாவுடைய இறப்பு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. அவருடைய குடும்பத்தினருக்கு என்னுடைய அனுதாபங்கள். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.@manobalam
— Rajinikanth (@rajinikanth) May 3, 2023
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025