“G.o.a.t மங்காத்தா படத்தை விட 100 மடங்கு தரமா இருக்கனும்”: வெங்கட் பிரபுவுக்கு அஜித் கொடுத்த அட்வைஸ்.!

Published by
பால முருகன்

சென்னை : தான் நடித்த ‘மங்காத்தா’ படத்தை விட விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘கோட்’ படம் 100 மடங்கு தரமாக இருக்க வேண்டும் என, நடிகர் அஜித் குமார் தன்னிடம் கூறியதாக இயக்குநர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வெங்கட் பிரபு, விஜய் மற்றும் அஜித் இருவருக்கும் இடையேயான நட்பு, ஒருவருக்கு மற்றொருவரிடம் இருக்கும் மதிப்பு மற்றும் மரியாதை குறித்து வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அந்த வகையில், தான் அஜித் குமாரை வைத்து மங்காத்தா படம் இயக்கி வரும்போது, “நீ விஜயை வைத்து கண்டிப்பாக சிறந்த ஒரு படம் இயக்க வேண்டும்”என அவர் தன்னிடம் கூறியதாக வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

அவர் சொன்ன வார்த்தையை சாத்தியம் ஆக்கும் வகையில் G.o.a.t படம் எனக்கு ஒரு வாய்ப்பை உறுவாக்கிக் கொடுத்தது என தெரிவித்துள்ள வெங்கட் பிரபு,இது குறித்து அஜித்திடம் கூறியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததாகவும், எத்தனை வருடங்களாக உன்னிடம் நான் கூறி வந்தேன்.. சரி படத்தை தரமாக எடுத்து முடித்து விடு என தனக்கு அட்வைஸ் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்

சரி அஜித் குமார்தான் விஜய் மீது அன்போடும், அக்கரையோடும் இருக்கிறார் என்று பார்த்தால், விஜயும் அஜித் குமாரின் நலனிலும், நட்பிலும் ஆதரவோடுதான் இருக்கிறார் என்பது வெங்கட் பிரபு கூறிய மற்றொரு தகவல் மூலம் உறுதி செய்யப்பட்டது. அதாவது, சமீபத்தில் அஜித் குமார் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது அனைவருக்கும் தெரியும், அப்போது படப்பிடிப்பிற்காக நடிகர் விஜய் வெளியூரில் இருந்தபோது, தொலை பேசி வாயிலாக அஜித் குமாரை அழைத்து நலம் விசாரித்ததாகவும், இருவரும் நீண்ட நேரம் சிரித்து, மகிழ்ந்து பேசிக்கொண்டதாகவும் வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

இருவரும் பேசிக்கொள்வதை பார்த்தபோது ஒரு ரசிகனாக தான் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக கூறிய வெங்கட் பிரபு, இருவரும் சிறந்த நண்பர்கள் என்பது உலகத்திற்கு புலப்படாத உண்மை எனவும் கூறியுள்ளார். அஜித் மற்றும் விஜய் இருவருக்குமே மிக சிறந்த மனது எனக்கூறியுள்ள வெங்கட் பிரபு, G.o.a.t படம் மங்காத்தாவை விட 100 மடங்கு நன்றாக இருக்க வேண்டும் என்ற ஆசையுடன் இயக்கியுள்ளதாகவும், அதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் சமூக வலைதளப்பக்கங்களில் இரு அணியாக பிரிந்து முரண்பாடான கருத்துக்களை முன்வைத்து பகை வளர்க்கும் நிலையில், அணியின் ஆணி வேர்களாக இருக்கும் அவர்கள் இருவரும் மனித மாண்போடுதான் இருக்கிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

ஆ.ராசா மீது சரிந்த மின் விளக்குகள்., நூலிழையில் தப்பிய பரபரப்பு காட்சிகள் இதோ..

மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…

52 minutes ago

நாடு முழுவதும் நீட் தேர்வு.., சோதனை கெடுபிடிகள், தற்கொலை முதல் வினாத்தாள் மோசடி வரை…

சென்னை : நேற்று (மே 4)  இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…

2 hours ago

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

2 days ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

2 days ago