காமெடிக்கு பஞ்சமே இருக்காது .! பீஸ்ட் புரோமோஷன் நிகழ்ச்சியின் தொகுப்பாளர இவர்தான்.!

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள டார்க் ஆக்சன் திரைப்படம் “பீஸ்ட்”. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு ஹிந்தி, மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் வரும் ஏப்ரல் 2-ஆம் தேதி ( நாளை) மாலை 6-மணிக்கு வெளியாகிறது.
இப்படத்திற்கு இசையை வெளியிட்டு விழா கிடையாது என்பதால் படத்தின் புரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. சன் டிவி ஒளிபரப்பு செய்யும் இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது. வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி இரவு ஒளிபரப்பாகும் என தெரிகிறது.
இந்நிலையில், தளபதி விஜய் கலந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போவது, இயக்குனர் நெல்சன் திலிப்குமார் என தற்போது சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. விரைவில் இதற்கான ப்ரோமோ வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுங்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள்.., இந்தியாவை மிரட்டிய இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் அவுட்.!
July 11, 2025
”லோகேஷ் மீது கோவமாக உள்ளேன்” – நடிகர் சஞ்சய் தத்.!
July 11, 2025