Bigg Boss Season 7: பிக் பாஸ் தொடங்கும் தேதி, போட்டியாளர்கள் பட்டியல் இதோ!

bigg boss kamal haasan

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது, மேலும் ஸ்டார்  விஜய் டிவி சேனல் அடிக்கடி புதிரான ப்ரோமோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. பிக் பாஸ் சீசன் 7 இல் இரண்டு வீடுகள் இருக்கும் என்ற தகவல் ரசிகர்களை மேலும் ஆச்சரியமடைய செய்துள்ளது.

பிக்பாஸ் 7 விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற பட்டியலும் இந்த நிகழ்ச்சி தொடங்காவதற்கான தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 அக்டோபர் 1, 2023 அன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும். இந்நிலையில், வெளியீட்டு தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி,  மகபா ஆனந்த், நடிகை ரோஷினி, ‘குக்கு வித் கோமாய்’ புகழ் ரவீனா தாஹா, செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், ஷகிலாவின் மகள் மிலா, நடிகர் பப்லூ பிருத்வீராஜ், ரேகா நாயர் மற்றும் தர்ஷா குப்தா ஆகியோர் புதிய சீசனுக்கான உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியலில் உள்ளனர். உறுதிப்படுத்தப்படாத பட்டியலில் செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், விஜய் டிவி ஜாக்குலின், பயில்வான் ரங்கநாதன், டிரைவர் ஷர்மிளா மற்றும் பலர் உள்ளனர். வரும் நாட்களில் போட்டியாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்