G20 Summit : அடுத்த ஜி20 தலைமை பிரேசில்.! பொறுப்பை பிரேசில் அதிபரிடம் ஒப்படைத்தார் இந்திய பிரதமர் மோடி.!

PM Modi and Brazil President Luiz inácio lula da silva

கடந்த முறை 17வது ஜி20 கூட்டத்தை இந்தோனீசியா தலைமை ஏற்று நடத்தி வந்த நிலையில், இதனை தொடர்ந்து இந்தியா வசம் ஜி20  கூட்டமைப்பை நடத்தும் தலைமை பொறுப்பு கடந்த நவம்பர் மாதம் ஒப்படைக்கப்பட்டது. இதில் ஜி20 நாடுகளுக்கு இடையேயான பொருளாதார மேம்பாடு, காலநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து இந்தியாவில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற்று வந்தது.

இதனை தொடர்ந்து ஜி20 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 18வது ஜி20 உச்சி மாநாடு நேற்றும் இன்றும் நடைபெற்றது. டெல்லி ராஜ்கோட்டில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஜி20 உறுப்பு நாடு தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாடானது ‘ஒரேபூமி ஒரே குடும்பம்’ என்ற தலைப்பில் 2 கட்டமாக ஆலோசனை நடைபெற்றது. இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் முன்னர், ஜி20 மாநாடு தலைவர்கள், அனைவரும் டெல்லி ராஜ்கோட்டில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு சென்றனர். அங்கு மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து பாரத் மண்டபத்தில் ஜி20 கூட்டம் நடைபெற்றது. இந்த இரண்டாம் நாள் இறுதி கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே குடும்பம் பற்றி நேற்றைய மாநாட்டில் நாம் ஆலோசித்தோம். இன்று ஜி20 கூட்டமைப்பு ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் பற்றிப் பேசுவதற்கு ஏற்ற தளமாக உருவாகியுள்ள திருப்தி அளிக்கிறது. என பேசினார்.

இதனை அடுத்து அடுத்த ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் பொறுப்பை பிரதமர் மோடி பிரேசிலுக்கு வழங்கினார். இனி அடுத்து வரும் ஜி20 மாநாடு பிரேசில் தலைமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரத்தை பிரதமர் மோடி பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு வழங்கினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்