Jayam Ravi: ராயப்பன் லுக்கில் ஜெயம் ரவி நடிக்கும் ‘சைரன்’ படத்தின் முதல் போஸ்டர்!

நடிகர் ஜெயம் ரவி பிறந்தநாளை முன்னிட்டு, இன்று அவர் நடித்திருக்கும் ‘சைரன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. பர்ஸ்ட் லுக் போஸ்டரில் நடிகர் ஜெயம் ரவி நரைத்த முடியுடன் தளபதி விஜய் பிகில் படத்தில் நடித்திருக்கும் ராயப்பன் தோற்றத்தில் இருக்கிறார். நெட்டிசங்களும் இதனை ஒப்பிட்டு ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

மேலும், கிளிம்ப்ஸ் வீடியோவில் அவர் புஷ்-அப் செய்வதையும், வேட்டி மற்றும் சட்டை அணிந்திருப்பதையும் காட்டுகிறது. இந்தப் படத்தில் ஜெயம் ரவி வழக்கத்தை விட வயதானவராகத் நடித்துள்ளதாக தெரிகிறது.
IT IS THE @actor_jayamravi DAY ! ????
Beginning the celebrations with a glimpse from the sets of #Siren ❤️????
The #SirenPreface ????@antonybhagyaraj @KeerthyOfficial @anupamahere @sujataa_HMM @gvprakash#HBDJayamRavi #HappyBirthdayJayamRavi pic.twitter.com/7NKXetMiAd
— Sony Music South (@SonyMusicSouth) September 9, 2023
மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு ஆகியோரும் நடித்துள்ளனர். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜய்குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். மாநகரம் புகழ் செல்வகுமார் எஸ்.கே ஒளிப்பதிவு செய்ய, ரூபன் படத்தொகுப்பு செய்கிறார்.
சைரன் படத்தில் ஜெயம் ரவி கைதியாகவும், கீர்த்தி சுரேஷ் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை, திரைக்கதை எழுத்தாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆண்டனி பாக்யராஜ் எழுதி இயக்கியுள்ளார்.
இப்படத்தின் இரண்டாவது ஷெட்யூல் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு நவம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் முதல் ஷெட்யூல் முன்னதாக சென்னையில் நடந்து முடிந்தது குறிப்பிடத்தக்கது.