சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
சந்தானம், செல்வராகவன், கெளதம் வாசுதேவ் மேனன் என பலர் நடிப்பில் உருவாகியுள்ள DD Next Level படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு 2, DD ரிட்டர்ன்ஸ் படங்களில் நடித்தார். அந்த படமும் ஹிட்டாகி விடவே, தற்போது அதேபாணியில் DD Next Level எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இப்படமும் முந்தைய படங்களை போலே காமெடி மற்றும் திரில்லர் வகையை சார்ந்து எடுக்கப்பட்டுள்ளது. தங்கள் வழக்கமான காமெடி கூட்டணியான மொட்டை ராஜேந்திரன், லொள்ளுசபா மாறன், லொள்ளு சபா ஜீவா ஆகியோருடன் இந்த முறை இயக்குனர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.
இப்படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் எழுதி இயக்கியுள்ளார். நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படம் வரும் மே 16ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் இப்போது வெளியாகி உள்ளது.
அதில், வழக்கமாக ஒரு பேய் வீட்டிற்குள் சந்தானம் மாட்டிக்கொள்வார். அங்கு நடக்கும் திகில் சம்பவங்களை காமெடி கலந்து படம் முழுக்க சிரிக்க வைத்திருப்பார்கள். இந்த முறை சினிமா விமர்சகராக நடிக்கும் சந்தானம், ஒரு சினிமாவுக்குள் மாட்டிக்கொள்கிறார். அங்கு நடக்கும் சம்பவங்களை காமெடியாக சொல்லி இருப்பார்கள் என தெரிகிறது. இதில் கெளதம் மேனன், ரெடின் கிங்ஸ்லி என பலரும் நடித்துள்ளதால் படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
வெற்றிபெறுமா பஞ்சாப்? சென்னைக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
April 30, 2025