vikram and malavika mohanan [Image source : file image ]
நடிகை மாளவிகா மோகனன் தற்போது நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்காக மாளவிகா மோகனன் வெறித்தனமாக தயாராகி வருகிறார் என்றே கூறலாம்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தற்காப்புக் கலையான சிலம்பம் கற்றுக்கொண்ட வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியீட்டு இருந்தார். அந்த வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலானது. இதனையடுத்து, விக்ரம் குறித்து மாளவிகா மோகனன் செய்த பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
எப்போதும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்த்து வரும் மாளவிகா மோகனன் நேற்று டிவிட்டரில் #AskMalavika மோகனன் என்ற ஹாஸ்டேக் மூலம் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார். அப்போது ரசிகர் ஒருவர் விக்ரம் சார் எப்படி இருக்கிறார்..? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த மாளவிகா மோகனன் ” இப்போது தங்கலான் படத்தை திரும்பிப் பார்க்கும்போது, விக்ரம் சார் இல்லாத கடினமான பயணத்தை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. அவர் ஒவ்வொரு அடியிலும், கிட்டத்தட்ட ஒவ்வொரு ஷாட்டிலும் எனக்கு உதவியிருக்கிறார். அவர் தன்னலமற்றவர், தன்னைச் சுற்றியுள்ள அனைவரிடமும் மிகுந்த அக்கறை கொண்டவர், சக நடிகராக ஊக்குவிப்பவர் & சுற்றி இருப்பதில் மிகவும் வேடிக்கையாக இருப்பவர்! அவரது நகைச்சுவை உணர்வு நாம் சொல்வது போல் “வெற லெவல்” என கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணயத்தில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…