Regina Cassandra [File Image]
தமிழ் சினிமாவில் கண்ட நாள் முதல் எனும் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாநகரம், ஜெமினி கணேசனும் சுருளி ராஜானும், முகிழ், சக்கரம், கசட தாபர, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக இவருடைய நடிப்பில் “கருங்காப்பியம்” எனும் திரைப்படம் வெளியானது.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பல திரைப்படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். இதற்கிடையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சினிமா துறையில் நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் கடந்து வந்த சவால்கள் மற்றும் தன்னிடம் ஒருவர் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டது குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” நான் பல தடைகளை தாண்டி தான் சினிமாவிற்குள் வந்து இருக்கிறேன். நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறேன். சினிமா மீது எனக்கு அதிகமாக ஆர்வம் இருந்தது. அந்த சமயம் எல்லாம் ஒரு படத்திலாவது நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என நான் ஆசையுடன் காத்திருந்திருக்கிறேன்.
நடிகைகளுக்கு 40 வயசு ஆனாலே கருவேப்பிலை மாதிரி தூக்கி போட்டறாங்க! நடிகை ரேகா குமுறல்!
அப்படி ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு நான் சென்றேன். அந்த சமயம் எனக்கு வயது 20 இருந்திருக்கும். 20 வயதில் ஒரு படத்தில் நடிக்க அந்த படத்தின் தயாரிப்பாளரிடம் எனக்கும் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்டேன். அதற்கு அந்த தயாரிப்பாளர் என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டார். அப்போது எனக்கு வயது மிகவும் குறைவு என்பதால் எனக்கு இதைப்பற்றி ஒன்னும் தெரியவில்லை. நான் அட்ஜெஸ்ட்மென்ட் பிரச்சனை சந்தித்தது அது தான் முதல் முறை” எனவும் நடிகை ரெஜினா தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகை ரெஜினா தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைப்போல காமெடி நடிகர் சதிஷிற்கு ஜோடியாக ‘கான்ஜூரிங் கண்ணப்பன்’ எனும் திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த இரண்டு படங்களுக்கான படப்பிடிப்பும் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…