எனக்கு காதல் திருமணமா இருந்தா சூப்பரா இருக்கும்! மனம் திறந்த நடிகை கங்கனா ரனாவத்!

kangana ranaut

நடிகை கங்கனா ரனாவத் 36 வயதாகியும் இன்னும் யாரையும் திருமணம் செய்துகொள்ளாமல் தொடர்ச்சியாக சினிமாவில் நடித்து கொண்டு இருக்கிறார். கடைசியாக இவர் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் சரியான விமர்சனத்தை பெறவில்லை என்றாலும் கூட கங்கனாவின் நடிப்பு பெரிதளவில் பேசப்பட்டது என்றே சொல்லலாம். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக கங்கனா சில படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார்.

இதற்கிடையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய திருமணம் காதல் திருமணமாக இருந்தால் நன்றாக இருக்கும் என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” ஒவ்வொரு பெண்ணும் தனது திருமணம் மற்றும் ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். அப்படி தான் நானும் ஆசைப்படுகிறேன்.  நான் ஒரு குடும்பமாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்று.

நான் திருமணம் செய்து குடும்பம் நடத்த விரும்புகிறேன், எனக்கு என்று தனி குடும்பம் என்று ஒன்று கண்டிப்பாக வேண்டும்.  அதற்காக நான் கண்டிப்பாக திருமணம் செய்துகொள்வேன். என்னுடைய திருமணத்திற்கு சில வருடங்களுக்கு முன்பு நான் ஒருவரை காதல் செய்து திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும். என்னுடைய விருப்பமும் அது தான்.

படப்பிடிப்பு கேரவனை சொந்த வீடு போல் மாற்றிய கங்கனா ரனாவத்.! எவ்வளவு விலைக்கு தெரியுமா..?

நான் திருமணம் செய்துகொள்வதில் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” எனவும் கங்கனா ரனாவத்  தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் நான் திருமணம் செய்து கொள்ளலாம் என்று நான் திட்டமிட்டு இருக்கிறேன்” எனவும் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் உங்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும். நடிகை கங்கனா ரனாவத் சந்திரமுகி 2 படத்தை தொடர்ந்து மேவாரா இயக்கத்தில் உருவாகி வரும் “தேஜாஸ்” என்ற திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும், எமர்ஜென்சி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த திரைப்படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

NASA - Netflix
eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai